CSK Vs MI போட்டியை சென்னை ரசிகர்கள் வான்கடே மைதானத்தில் காண தடை – அதிர்ச்சியில் ரசிகர்கள்.

சென்னை ரசிகர்களுக்கு மும்பை அணி நிர்வாகம் கொடுத்துள்ள விதிமுறைகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் ம

By ·

சென்னை ரசிகர்களுக்கு மும்பை அணி நிர்வாகம் கொடுத்துள்ள விதிமுறைகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது.

மேலும் இந்த போட்டி மும்பை அணியின் சொந்த அரங்கமான வான்கடே மைதானத்தில் நாளை 7.30 மணியளவில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை எதிகொள்ள இருப்பதினால் எதிர்பாப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அப்படிபட்ட நிலையில் தான் நிடா அம்பானி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விஷியத்தை செய்துள்ளார்.

தோனியின் ரசிகர் பட்டாளம் :

இந்நிலையில் நாளை நடக்கும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை என இரு பெரும் அணிகள் ஆடுவதினால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. அதனை தவிர்த்து தோனிக்கு பொதுவாகவே அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதனால் சென்னை மற்றும் மும்பை விளையாடும் போது சென்னை அணியின் ரசிகர்கள் விளையாட்டு அறங்கத்தை ஆக்கிரமித்து கொள்வார்கள். அதே போலத்தான் ஆர்சிபி விளையாடும் போதும் அவர்களின் ரசிர்கள் அரங்கத்தை ஆக்கிரமித்து கொண்டனர்.

சென்னை ரசிங்கர்களுக்கு விதிமுறை :

இந்நிலையில் மும்பை மைதானத்தில்மற்ற அணியின் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை திட்டுயுள்ளார் நிடா அம்பானி. அதன் படி மும்பை ரசிகர்களுக்கு என்று தனியாக இரண்டு கேலரியை நிடா அம்பானி முன்பதிவு செய்துள்ளார். எனவே அந்த கேலரிக்குள் மும்பை ரசிகர்களை தவிர மற்ற அணி ரசிகர்கள் அமர அனுமதி கிடையாது.

அதே போல மும்பை அமரும் பகுதியில் மும்பை ரசிகர்கள் மட்டுமே அமர வேண்டும் என்றும், அவர்களை மும்பை செற்சியை தவிர மற்ற எந்த நிறத்திலும் உடை அணிய கூடாது என்று விதிமுறை விதித்துள்ளது மும்பை அணி நிர்வாகம். இது போன்ற விதிமுறைகளினால் மும்பை ரசிகர்களை தவிர மற்ற அணி ரசிகர்கள் தங்களுடைய அணி விளையாடுவதனை பார்க்க முடியாது என்பதினால் பலரும் இந்த விதிமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை