சென்னை சூப்பர் கிங்ஸ் நிருவாகம் திருப்பூரில் திறக்க இருக்கும் புதிய அகாடெமி – முழு விபரம் இதோ.

இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமானது தமிழ்நாட்டின் பல இடங்களில் தங்களிடைய கிளிகளை திறந்து வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வரும் நிலையில் தான் திருப்பூரில் தங்கள் சூப்பர் கிங்ஸ் அகாடமியைத் திறப்பதாக சமீபத்தில் அறிவித்தது. சென்னையிலிருந்து 46

By ·

இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமானது தமிழ்நாட்டின் பல இடங்களில் தங்களிடைய கிளிகளை திறந்து வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வரும் நிலையில் தான் திருப்பூரில் தங்கள் சூப்பர் கிங்ஸ் அகாடமியைத் திறப்பதாக சமீபத்தில் அறிவித்தது. சென்னையிலிருந்து 460 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாலி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இந்த வசதி அமையும்.

இதன் மூலம் ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த கிரிக்கெட் வசதிகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இடங்காளில் நான்கு தரை, இரண்டு மேட்டிங் மற்றும் இரண்டு ஆஸ்ட்ரோடர்ஃப் மேற்பரப்புகள் உட்பட எட்டு ஆடுகளங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான உள்கட்டமைப்பைப் உருவாக்க இருக்கிறது. மேலும் இரவு நேரங்களில் விளையாட வசதியாக இருக்க ஃப்ளட்லைட்களும் நிறுவப்பட்டுள்ளன.

இத்திட்டம் 6 முதல் 23 வயதுடைய சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு டிசம்பர் 2023 முதல் கிடைக்கும். நகரத்தில் பல்வேறு கிரிக்கெட் கனவுகளுடன் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களின் திறனைப் பயன்படுத்திக் கொள்வதை அகாடமி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிவிப்புடன், சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் இது குறித்து பேசுகையில்.

அவர் கூறுகையில் “சூப்பர் கிங்ஸ் அகாடமியின் எங்கள் நோக்கம் தமிழ்நாடு முழுவதும் திறமைகளை வளர்ப்பதாகும். ஏற்கனவே சென்னை, சேலம், ஓசூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மையங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. திருப்பூரை எங்களின் புதிய இடமாகச் சேர்ப்பதன் மூலம் எங்கள் வரவை மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் காசி விஸ்வநாதன் கூறினார்.

மேலும, அகாடமி அமைந்துள்ள யாலி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் விஷ்ணு கோவிந்த், இந்த இடத்தில் அகெடமியை அமைப்பது குறித்தும் அறிவிப்பு குறித்தும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் உதவியுடன் உயர்தர பயிற்சியாளர்களை திருப்பூருக்கு கொண்டு வருவதில் உற்சாகமாக இருப்பதாக கோவிந்த் கூறினார்.இது குறித்து அவர் பேசுகையில் “சூப்பர் கிங்ஸ் அகாடமியுடன் இணைந்து உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் பயிற்சி வசதிகளை திருப்பூருக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த பிராந்தியத்தில் உள்ள சிறப்பான கிரிக்கெட் திறமைகளை வெளிக்கொணர வேண்டும். அவர்களுக்கு நிபுணதுவமான பயிற்சி முறைகள் மற்றும் சிறந்த வசதிகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள் என்றார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2022 இல் சூப்பர் கிங்ஸ் அகாடமி தோன்றியதிலிருந்து, அகாடமி நாட்டின் பல இடங்களில் வந்துள்ள நிலையில் கண்டிப்பாக அது இளைஞர்களுக்கு சாதகமான பலனைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை