MI அணியை விட CSKவின் இந்த அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது – ஹர்டிக் பாண்டியா.

ஐபிஎல் 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக விளையாடினார். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து பல அணிகள் விளையாடினாலும் கடந்த ஆண்டின் நடப்பது சம்பியன்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றும் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடந்த

By ·

ஐபிஎல் 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக விளையாடினார். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து பல அணிகள் விளையாடினாலும் கடந்த ஆண்டின் நடப்பது சம்பியன்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றும் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட சிறப்பாக விளையாடி 13.5 ஓவரில் வெற்றியை பெற்றது.

அப்படியொரு நிலையில் தான் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பணியா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் குஜராத் அணியின் வெற்றி ரகசியம் குறித்து பேசியிருக்கிறார். அதாவது சமீபத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ராபின் உத்தப்பா ஜியோ சினிமா தளத்தில் இந்திய அணியின் வீரரும், தற்போது நடந்துவரும் ஐபிஎல் சீசனின் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியனை பேட்டி எடுத்திருந்தார்.

ஹர்திக் பாண்டிய பேட்டி :

அந்த பேட்டியில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியுடனான தன்னுடைய நட்பு, இந்திய அணியில் விளையாடுவது குறித்தும், குஜராத் பயிற்சியாளர் நெஹரா குறித்தும் பேசுனார். அப்போதுதான் குஜராத் அணியின் கேப்டன் பதவி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறுகையில் “என்னுடைய அணியில் நல்ல வீரர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்களை சிறந்த வீரர்கள் என்று கூற முடியாது. நான் பார்த்தவரையில் கிரிக்கெட்டில் இரண்டு வழிகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

அதாவது “ஓன்று அணியில் விளையாட கூடிய வீரர்களை தொடக்கம் இருந்து முடிவு வரையில் சிறப்பாக தேர்வு செய்து வெற்றி பெறுவது. அதாவது மும்மை அணியை பொல.மற்றொன்று என்னவென்றால் வெற்றி பெறுவதற்கு சரியான சூழ்நிலையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போல ஏற்படுத்துவது. அவர்களது அணியில் என்ன வீரராக இருந்தாலும் அவர்களின் சிறந்த விளையாட்டை சென்னை அணி வாங்கிவிடும். அதுதான் எனக்கு அணியை சரியாக வழிநடத்த உந்துதலாக இருந்தது என்று கூறினார் ஹர்டிக் பாண்டியா.

மேலும் பேசிய கார்த்திக் பாண்டியா நான் மஹேந்திர சிங் தோனியுடம் இருந்து அதிகம் கற்றுக்கொண்டேன். கிரிக்கெட்டை அவர் அணுகும் முறை, சிக்கலான சூழ்நிலைகளை கையாளுவது போன்றவற்றை கற்றுக்கொண்டேன், ஆனாலும் ஒரு கேட்பானாக நான் யாரையும் பின்பற்றவில்லை. என்னுடைய பாணியிலேயே கேட்டான்சி செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்தார் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை