தோனிக்கு முதல் நாளில் பைக் கொடுத்தோம் – ஆனால் அவர் காணாமல் போய் விட்டார். CSK உரிமையாளர் எம்.சீனிவாசன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் போதும் முதலில் நியாபகம் வருவது தல எம்.எஸ்.தோனி என்ற பெயர் தான், அந்த அளவிற்கு எம்.எஸ்.தோனிக்கும் சென்னை மண்ணிற்கும் உள்ள ஒரு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் பல வட இந்தியர்களை வெறுத்தாலும் அனைவராலும் வெறுக்கப்படாத ஒரு வட
சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் போதும் முதலில் நியாபகம் வருவது தல எம்.எஸ்.தோனி என்ற பெயர் தான், அந்த அளவிற்கு எம்.எஸ்.தோனிக்கும் சென்னை மண்ணிற்கும் உள்ள ஒரு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் பல வட இந்தியர்களை வெறுத்தாலும் அனைவராலும் வெறுக்கப்படாத ஒரு வட இந்தியர் யார் என்றால் அது எம்.எஸ்.தோனி தான். அந்த அளவிற்கு சென்னை முழுவதும் ‘தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனியின் இரண்டாவது சொந்த ஊர் சென்னை என்றே சொல்லலாம்.
ஐபிஎல் தொடங்கி காலத்திலிருந்து இன்று வரையில் அதிகமுறை ஒரே அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் அது எம்.எஸ்.தோனி தான். அதோடு இவரது தலைமையில் சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் படங்களை வென்றிருக்கிறது. ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தோனி ஜார்கண்டின் மாநிலத்தில் உள்ள ராஞ்சியைச் சேர்ந்தவர் என்றாலும், சென்னையின் மஞ்சள் நிறம் என்பது அனைவரின் மனதிலும் உணர்வு பூர்வமான ஒன்றாக கலந்து விட்டது.
இப்படியொரு இலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என் சீனிவாசன் தோனியை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை கூறினார். அதாவது தோனி சென்னையில் தான் வளர்ந்தார், என்னுடைய சென்னை தான் அவரையும் வளர்த்தது. ஏனென்றால் மேட்ச் நடக்கும் முன்னர் வந்து பார்த்தால் திடீரென அவர் பைக்கில் சென்றுகொண்டிருப்பர். அவருக்கும் பைக்களுக்கும் இடையேயான பிணைப்பு பிரிக்க முடியாத ஓன்று என்றார்.
மேலும் பேசிய என் சீனிவாசன் “முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தாலும், முதல் ஐபிஎல் போட்டியின் இறுதி வரையில் நன்றாகவே சென்னை அணியை வழிநடத்தினார். மேலும் தோனி சென்னை வந்தவுடன் 2008ஆம் ஆண்டு தோனிக்கு ஒரு பைக் சுற்றிபார்ப்பதற்காக வழங்கப்பட்டது. ஆனால் பைக் கொடுத்ததும் அவர் திடீரென காணாமல் போய் விட்டார். அப்போது தோனி சென்னை முழுவதும் உள்ள சாலைகலை அறிய சென்றுவிட்டார் என்று ஸ்போர்ட்ஸ்டார் கான்க்ளேவில் என் ஸ்ரீனிவாசன் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2023னிலும் தோனி சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கிறார். குஜராத்திற்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தாலும், அதற்கு பிறகு லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது சென்னை அணி. இந்த வெற்றி இப்படியே தொடர்ந்தால் கண்டிப்பாக இந்த சீசனில் சென்னை அணி வெற்றிபெறுவதற்க்கான வாய்ப்பு பன்மடங்கு உள்ளது