IPL CSK vs MI – தடுமாறும் தீபக் சாஹர், சென்னை அணியில் இருந்து வெளியேறுவாரா? – மெயின் அலி விளக்கம்.

ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்த

By ·

ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை நடக்கும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத இருக்கின்றனர். இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது. மேலும் இந்த போட்டி மும்பை அணியின் சொந்த அரங்கமான வான்கடே மைதானத்தில் நாளை 7.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை எதிகொள்ள இருப்பதினால் எதிர்பாப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் பேட்டியில் பேசிய சென்னை அணியின் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளர் மெயின் அலி சென்னை மற்றும் மும்பைக்கு இடையே இன்று நடக்கும் போட்டி குறித்து பேசியிருந்தார்.

மெய்ன் அலி கூறியது :

அவர் கூறுகையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போதுமே கலை காட்டும் அளவிற்கு மிகவும் பிரம்மண்டமாக சர்வதேச அணிகளுக்கு இடையேயான போட்டிகள் அளவிற்குத்தான் பார்க்கப்படுகிறது. இதனை கால்பந்து ரீதியாக சொல்ல வேண்டும் என்றால் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், லிவர்புல் அணியும் ஒன்றாக எதிர்கொள்வது போன்றது. எனவே இந்த போட்டி ஐபிஎல்லில் மிகப்பெரியது.

மோசமான நிலைக்கு காரணம் :

எங்கள் அணியில் உள்ள வேகப்பந்து வீச்சளர் தீபக் சாகர் சரியாக கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. ஏனெற்றால் அவர் தற்போது தான் காயம் ஏற்பட்டு குணமடைந்து வந்திருக்கிறார். இது போன்ற போட்டிகளில் தீபக் சாகர் விளையாடும் போது தீபக் சாகரின் பந்துவீடும் திறன் பன்மடங்கு மேம்பட வாய்ப்பு இருக்கிறது. ஐபிஎல் தொடரில் தீபக்சாகர் அதிக போட்டிகளில் விளையாடினால் கண்டிப்பாக அவர் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு வந்து விடுவார்.

யாருக்கு வெற்றி :

தீபக் சாகர் எங்களுடைய மிக பெரிய முக்கியமாக பந்துவீச்சாளர். ஏனென்றால் அவர் எங்களுக்கு பவர் பிளே நேரத்தில் அதிகமான விக்கெட்டுகளை எடுத்து கொடுப்பார் என்று பாராட்டினார் சூழல் பந்து வீச்சாளர் மெயின் அலி.இந்நிலையில் இன்று இரவு நடக்கும் போட்டியில் மும்பை அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் மும்பை அணியின் சொந்த மைதானம் வான்கடே என்பதினால் மும்பை அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை