ஐபிஎல் கோப்பைக்கு சென்னை தி.நகர் பெருமாள் கோவிலில் நடந்த பூஜை – வைரலாகும் வீடியோ பதிவு.
ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதற்குள் பலவிதமான சிக்கல்கள் வந்தது. சொல்லப்போனால் 3 நாட்கள் நடந்த ஐபிஎல் போட்டி இதுதான். ஏனென்றால் கடந்த 28 போட்டி தொடங்கி மழை
ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதற்குள் பலவிதமான சிக்கல்கள் வந்தது. சொல்லப்போனால் 3 நாட்கள் நடந்த ஐபிஎல் போட்டி இதுதான். ஏனென்றால் கடந்த 28 போட்டி தொடங்கி மழை காரணமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு 9 தேதி நடந்தது.
ஆனால் அப்போதும் முதல் இன்னிங் பிறகு மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. முதல் இன்னிங்கின் 20வது ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்களை குவித்தது. 215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது. பின்னர் மழை நின்றபோதும் மைதானம் காரணமாக போட்டி 1 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது.
இதனால் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் அணியின் கூட்டு முயற்சியால் சென்னை அணி இறுதி ஓவரில் அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்றது. இதற்கு காரணம் ஜடேஜா மற்றும் அணியின் கூட்டு முயற்சி தான். மேலும் வெற்றி பெற்றதும் சென்னை அணியின் கேப்டன் தோனி ஜடேஜாவை தூக்கி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். அது ரசிகர்களுக்கு மனதை ஊருக்கும் காட்சியாக இருந்தது.
#NEWSUPDATE : ஐபிஎல் கோப்பையுடன் தி.நகர் பெருமாள் கோவிலுக்கு வந்த CSK நிர்வாகம்#IPLTrophy #IPL2023Final #CSK #Chennai #NewsTamil24x7 pic.twitter.com/9dGkMNB4i2
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) May 30, 2023
இந்நிலையில் கோப்பையை வென்ற பிறகு எல்லா இடங்களிலும் கொண்டாட்டங்கள் தொடங்கின. குறிப்பா தமிழ் நாட்டின் பல பகுதிகளில் ரசிகர்கள் இரவு முழுவதும் கொண்டாடினார்கள். மேலும் சோசியல் மீடியாவில் இன்று வரையில் கொண்டாட்டங்கள் நிற்கவில்லை. சொல்லப்போனால் சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி மற்றும் இதர வீரர்களின் பெயர்கள் தற்போது இப்போது வரையில் ட்ரென்டிலேயே இருக்கிறது.
அப்படிப்பட்ட நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற 5வது கோப்பையை சென்னை தி.நகரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு புஜைகள் நடைபெற்றது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் சென்னை வெற்றி குறித்து பேசிய இந்தியா சிமெண்ட்ஸ் துணைத் தலைவர் சீனிவாசன் கூறுகையில் “தோனி ஒரு அருமையான கேப்டன், அவரால் மட்டுமே இது முடியும், அணியில் இருந்த வீரர்களை நினைத்து நான் பெருமை படுகிறேன் என்று கூறினார்.