தேஷ்பாண்டே, ரோஹித் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து புகழ்ந்து தள்ளிய தல தோனி.
மும்பை மற்றும் சென்னை அணிக்கு இடையே இந்த சீசனுக்கான முதல் ஐபிஎல் போட்டி நடந்தது. இந்த போட்டி மும்பையின் ஹோம் கிரவுண்டில் நடந்தது என்பதினால் மும்பை அன்னிக்கே அதிகம் பெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதல
மும்பை மற்றும் சென்னை அணிக்கு இடையே இந்த சீசனுக்கான முதல் ஐபிஎல் போட்டி நடந்தது. இந்த போட்டி மும்பையின் ஹோம் கிரவுண்டில் நடந்தது என்பதினால் மும்பை அன்னிக்கே அதிகம் பெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்திலேயே பல நல்ல வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 158ரன்கள் இலக்காக வைத்து களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தது. ஆனால் அதற்குப்பிறகு வெறி ஆட்டம் ஆடிய ரஹானே ஒரே ஓவரில் 23 ரன்கள் அடித்தார். மேலும் 27 பந்துகளில் 61 ரன்கள் அடுத்து சென்னை அணியை சுலபமாக வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
தோனி பேசியது :
இந்நிலையில் சென்னையின் வெற்றிக்கு பிறகு எம்.எஸ்.தோனி பேசுகையில் “இது ஒரு அருமையான உணர்வை தருகிறது. எங்களுடைய அணி வேகப்பந்து வீச்சளர் தீபக்கை சாஹரை முதல் ஓவரிலேயே இழந்தோம். அதேபோல சிசண்டா மகலாவிற்கு இது முதல் விளையாட்டு. சொல்லப்போனால் பந்து வீச்சாளரைக் குழப்புவது சற்று சிக்கலாக இருந்தது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்கள். பந்து ஆறாவது ஓவருக்கு பிறகு சரியாக திரும்பவில்லை. ஆனாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பின்னர் அதை நன்கு பயன்படுத்த முடிந்தது.
துஷார் தேஷ்பாண்டே :
மகலா மற்றும் பிரிட்டோரியஸ் மிகவும் நன்றாக விளையாடினார்கள். எங்களின் முதன்மை பந்துவீச்சாளரை இழந்த போதிலும், நல்ல பந்து வீச்சை எங்களால் கொடுக்க முடிந்தது. துஷார் தேஷ்பாண்டே மீது நாங்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தோம். நீங்கள் புதிதாக இருந்தாலும் அதனால் உங்ககளுக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கும். அவருக்கு நல்ல டொமஸ்டிக் விளையாட்டுகளில் பந்து வீசிய அனுபவம் இருந்தது. அதோடு அவரை டெத் ஓவர்களில் பந்து வீசுவது குறித்து பேசியிருந்தோம்.
தூள்கிளப்பிய ரஹானே :
அவர் நிறைய நோ-பால்களை வீசினார், ஆனால் கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் நன்றாக முன்னேறி இருக்கிறார். ரோஹித்தை அவர் அவுட்டாக்கிய பந்து மிகவும் அருமையானது. ராஹனேவுடன் நாங்கள் ஆரம்பத்திலேயே பேசினோம். அவர் தொடர்ந்து சிக்ஸர்களை அடிக்க கூடியாவர் கிடையாது என்றாலும் அவர் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் திறமையானவர். அவர் இந்த போட்டியில் பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
— Ninja (@IPLcskMSD) April 9, 2023
அனைத்து விளையாட்டுகளும் முக்கியமானவை. சொந்த மைதானத்தில் இருந்து வெளியில் நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்று தகுதிச் சுற்றுக்கு செல்வதே முதல் இலக்காக இருக்க வேண்டும். உங்களுக்கு முன்னால் உள்ள சிக்கலைப் பார்ப்பது, வெற்றிகளைப் பெறுவது மற்றும் புள்ளிகளைச் சேகரிப்பதிலேயே நீங்கள் முக்கியத்துவம் கொண்டிருக்க வேண்டும் என்றார் எம்.எஸ்.தோனி