சொந்த மண்ணில் மண்ணை கவ்விய மும்பை – 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை.

ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்தியில்

By ·

ஐபிஎல் 16 கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இதுவே ஐபிஎல் 16சீசனில் சென்னை மற்றும் மும்பை நேருக்கு நேராக மோத இருக்கும் முதல் போட்டி என்பதினால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இமயத்தில். மேலும் இந்த போட்டி மும்பை அணியின் சொந்த அரங்கமான வான்கடே மைதானத்தில் விளையாடியது.

இந்த நிலையில் தான் இன்று நடந்த முதல் சென்னை vs மும்பை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் தூக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு நன்றாக இருந்தாலும் அவர்களது தீராத சாபம் மீண்டும் அவர்களு தொற்றிக்கொண்டது . தொடக்கம் முதல் 3 பௌண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மாவை தேஷ்பாண்டே ஆட்டமிழக்க செய்தார்.

அதில் இருந்துதான் மும்பை அணிக்கு விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. பின்னர் 6.4 ஓவரில் இஷான் கிஷான் ஜடேஜாவின் பந்துல ஆட்டமிழக்க பின்னர் தொடர்ந்து வந்த மும்பை அணியின் பேட்ஸ்மேன்ஸ்கள் அதிர்ச்சி கொடுத்து வெளியேற. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இஷான் கிஷான் 32 ரன்கள் எடுத்தார். அதுவே மும்பை அணியின் அதிகபட்ச ரன் ஆகும்.

இந்நிலையில் 157 ரன்கள் என்ற இலக்கை துரத்த வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது .0 ரன்கள் எடுத்த நிலையில் துவக்க பேட்ஸ்மேன் பேரன்தோர்ஃப் 0.4 ஓவர்களில் வெளியேறினார். அது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு பிறகு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரஹானே அசாத்தியமான இன்னிங்கை ஆடினார்.

அந்த சம்பவம் 3வது ஓவர்களில் போது நடந்தது. அஸ்ரத் கான் பந்துவீசிய அந்த ஓவரில் முதல் பந்தை 6 அடித்தார். அதற்கு பிறகு வந்த பந்துகளை பவுண்ட்டிரிகளுக்கு அனுப்பிய ரஹானே ஒரே ஓவரில் 27 ரன்கள் எடுத்தார். இந்த வருட ஐபிஎல் சீசனில் அதிகபட்சமான ரன் இதுதான். 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியடைய உறுதுணையாக இருந்தார்.

அதற்கு பிறகு களமிறங்கிய களமிறங்கிய ருதுராஜ் பொறுமையாக விளையாடி சென்னை அணிக்கு ரன் குவித்தார். பின்னர் 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட் வீழ்ந்தது. இருந்தாலும் குறைவான ரன்களே தேவைப்படும் என்பதினால் சூப்பர் கிங்ஸ் அணியில் பதர்ட்டம் இல்லை. இந்நிலையில் கடைசியாக களமிறங்கிய அம்பத்தி ராயுடு அற்புதமாக விளையாடி சென்னை அணியை வெற்றிபெறச் செத்தார். இதன் மூலம் சென்னை அணி தன்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை