விசில பறக்க விடலாம் – 5வது முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை க
ஐபிஎல் 2023 ல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கபட்ட இப்போட்டியானது மழையின் காரணமாக தேதி மாற்றம் செய்யப்பட்டு போட்டி நடந்து வந்தன. சென்னை அணி இந்த போட்டியில் வென்றால் 5 வது முறை கோப்பையை கைப்பற்றும். டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்களை குவித்தார்கள். 4 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்களை குவித்தார்கள். 5.2 ஓவர்கள் முடிந்த நிலையிலே பார்ட்னர்ஷிப்பில் அரை சதத்தை பூர்த்தி செய்தனர். 39 ரன்கள் இருந்த நிலையில் தோனியின் ஸ்டேம்பிங்கின் மூலம் விக்கெடை இழந்தார் கில். இருப்பினும் குஜராத் அணிக்கு ரன்கள் குவித்து வந்த வண்ணமே இருந்தன. மற்றொரு பக்கம் சாஹா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.
மீண்டும் அதிரடியை காட்டத் தொடங்கிய சாஹா 36 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மற்றொரு பக்கம் சாஹாவுடன் இணைந்த சாய் சுதர்ஷன் ரன்களை குவித்து வந்தனர். 54 ரன்களை இருந்த நிலையில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சாஹா. சென்னை அணியின் பௌலர்கள் அவர்களின் பேட்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர். ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி வந்த சாய் சுதர்ஷன் அதிரடியாக மாறி 33 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
சென்னை அணியின் பந்து வீச்சை அனைத்து பக்கங்களிலும் சிதறடிக்க குஜராத் அணியின் வீரர்கள் ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்ஷன் 96 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 20வது ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும். 215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது.
மழையின் காரணமாக நிருத்தி வைக்கப்பட்ட போட்டியானது 12.10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அதில் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4 ஓவர்கள் பவர் ப்ளே ஓவராக நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.6 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்களை குவித்தனர். 26 ரன்கள் இருந்த. நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதே ஓவரில் 47 ரன்களில் கான்வே ஆட்டமிழந்து வெளியேறினார்.
Take a bow sir jadeja🙌🙌
— Ankit Tiwary (@Ankittiwary70) May 29, 2023
Comeback super kings.
Congratulations @ChennaiIPL on winning the final of IPL 2023. #IPL2023Finals #IPL2023Final #MSDhoni #Jadeja #Sirjadeja #CSK #GTvsCSK pic.twitter.com/YoZLN1ayLQ
அதன் பின் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற சென்னை அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தை அளித்தார்.தன்னுடைய கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் வந்த தோனி முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற மைதானம் முழுவதும் அமைதியானது. அதன் பின் சென்னை அணி தடுமாறியே வந்தது. ஆனால் ஜடேஜா கடைசி 2 பந்துகளில் 10 ரன்களை விளாசி 15 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.