சிஎஸ்கே அணியை விட்டு சொந்த நாடு திரும்பும் முஸ்தபிசுர் ரஹ்மான்.. காரணம் என்ன? திரும்பி வருவாரா? விபரம் இதோ
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடர்நது தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்றய நிலவரப்படி ராஜஸ்தான் முதல் இடத்திலும், கொல்கத்தா இரண்டவது இடத்திலும், சென்னை அணி மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது. முதல் மற்றும் இரண்டு போட்டிகளில் சென்னை
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடர்நது தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்றய நிலவரப்படி ராஜஸ்தான் முதல் இடத்திலும், கொல்கத்தா இரண்டவது இடத்திலும், சென்னை அணி மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது. முதல் மற்றும் இரண்டு போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக விளையாடி குஜராத் மற்றும் ஆர்சிபி அணியை வீழ்த்தியது.
ஆனால் விசாகப்பட்டினத்தில் டெல்லி அணிக்கு எதிரான சென்னை தோல்வியை சந்தித்தது. இதனால் சென்னை அணி 3வந்து இடத்திற்கு தள்ளப்பட்டது.இதற்கு பிறகு நாளை மறுநாள் 5ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராகவும், அதற்கு பிறகு ஏப்ரல் 8ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராகவும் சென்னை அணி விளையாட இருக்கிறது.
இந்நிலையில் அவர் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தன்னுடைய சொந்த நாடான பங்களாதேஷுக்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி வரும் ஏப்ரல் 5 மற்றும் 8ஆம் தேதிகளில் நடக்கும் போட்டிகளில் இவர் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிய வருகிறது. இதனால் இது பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.
இருந்த போதிலும் அதற்கு பிறகு மீண்டும் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் அணியில் வந்து இணைவார். அதாவது ஐபிஎல் முடிந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் நடப்பதினால் இதற்கான விசா எடுப்பதற்கும், பயோமெட்ரிக் கொடுப்பதற்கும் அவர் பங்களாதேஷ் செல்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வேலைகள் முடிந்த பிறகு அவர் அணியில் இணைவார்.
ஒருவேளை விசா மற்றும் பயோமெட்ரிக் எடுப்பதற்கு தாமதமாகும் பட்சத்தில் இன்னும் சில போட்டிகளில் கூட முஸ்தஃபீஸூர் ரஹ்மான் விளையாட முடியாமல் போகலாம். அவர் விளையாட முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் அல்லது சுழற்பந்து ஆல்ரவுண்டர் மெயின் அணியை அணியில் இணைக்கலாம்.
ஆனால் இங்குதான் பிரச்னை எழுகிறது. அதாவது சென்னை அணியானது ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி அதில் 2 போட்டிகளில் வெற்றியும் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியும் சந்தித்து புல்லிபட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. அதே சமயம் ஹைதராபாத் மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் ஏதுவான மைதானம் என்பதினால் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் இல்லாதது சென்னை ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.