கொல்கத்தா மைதானத்தில் CSK-வின் சிக்சர் மழை -49 ரன்கள் வித்தியாசத்தில் CSK-வின் மாபெரும் வெற்றி

ஐபிஎல் 2023 க்கான 33லீக் போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி எதிர்கொண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரானா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். தொடர் தோல்வியில் இருக்கும் கொல்கத்தா அணி

By ·

ஐபிஎல் 2023 க்கான 33லீக் போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி எதிர்கொண்டன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரானா  முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். தொடர் தோல்வியில் இருக்கும் கொல்கத்தா அணிக்கு இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணியின் தொடக்க அட்டகரர்கள் ருதுராஜ் மற்றும் கான்வே முதல் பந்திலிருந்தே அதிரடியை காட்ட தொடங்கினார்கள். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அற்புதமாக விளையாடி வந்தனர்.

இவருவரும் ஜோடி சேர்ந்து கொல்கத்தா அணியின் பௌலர்களை நன்றாக அடித்து வந்தனர். கான்வே அற்புதமாக விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ருதுராஜ் 35 ரன்களில் வெளியேற, அவர் சென்ற உடனே கான்வே 56 ரன்களில் வெளியேறினார். அதன் பின் ரஹானே மற்றும் டுபே கூட்டணி அமைத்து கொல்கத்தாவின் பந்து வீச்சளரை அனைத்து பக்ககளிலும் அடித்து வான வேடிக்கையை காட்டினார்கள். 16 பந்துகளிலே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தனர்.

கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை நான்கு பக்கங்களிலும் பந்துகளை அடித்து வீளசினர்கள், பந்து வீச்சாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என குழம்பி வந்தனர். ரஹானே தனது பங்கிற்கு அவரும் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின் 20 பந்துகளிலே டுபே அரை சதத்தை பூர்த்தி செய்து அதே நிலையில் விக்கெட்டை இழந்தார். ரஹானேயுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் கொல்கத்தா அணியை விளாசினார்கள். ஜடேஜா 18 ரன்களில் வெளியேற, தோனி களத்தில் இறங்கினார். 20 வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை குவித்தனர்.

236 என்ற இமாலய இலக்கை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே சோதனையில் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ராய் க்கு காயம் ஏற்பட்டதால் அவர் ஒபெனிங் செய்ய முடியவில்லை. அவர்க்கு பதில் நரைன் களமிறங்க அவர் ரன் ஏதும் எடுக்காமலும், அவருடன் ஜெகதீசனும் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்தையே சந்தித்து வந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர் அவுட்டாகி வெளியேறினார்.

இதற்க்கு இடையில் வந்த ராய் அற்புதமாக விளையாடி கொல்கத்தா அணிக்கு நம்பிக்கையை குடுத்தார். நிதிஷ் ரானாவும் சொற்ப ரன்களில் அவுட்டகி வெளியேற, அற்புதமாக விளையாடிய ராய் 19 பந்துகளில் அரை சதத்தை அடைந்தார். கொல்கத்தா அணிக்கு வாய்ப்பு இல்லை என்ற நிலையிலிருந்து வாய்ப்பை உருவாக்கி கொண்டு வந்த ராய் அதன் பிறகு அவரும் அவுட்டாகி வெளியேற, ரசலும் 9 ரன்களிலே வெளியேறினார். ரின்கு சிங் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் கொல்கத்தா அணிக்கு இருந்த வாய்ப்பும் வெளியே சென்றது. கொல்கத்தா அணியால் 20 ஓவர் முடிவில் 186ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை