இவ்வளவு வாய்ப்பு கொடுத்துட்டாங்க..எப்போது நீங்க சரியா விளையாட போறிங்க – சஞ்சு சாம்சனை விமர்சித்த பாஸ்கிதான் வீரர்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது தொடங்க இன்னமும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கியுள்ளது. குறிப்பாக விராட் மற்றும் ரோஹித் ஷர்மாவிற்கு 2 வாரம் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது தொடங்க இன்னமும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கியுள்ளது. குறிப்பாக விராட் மற்றும் ரோஹித் ஷர்மாவிற்கு 2 வாரம் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அவர்கள் இருவரும் இல்லாத நிலையில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் முதல் வாய்ப்பை தவறவிட்ட சஞ்சு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது போட்டியில் அற்புதமான அரை சதம் அடித்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த டி20 தொடரில் முதல் 2 போட்டிகளிலும் முக்கியமான நேரத்தில் சொதப்பினார் சஞ்சு சாம்சன். இதனால் பல முன்னணி வீரர்கள் மற்றும் முன்னல் வீரர்களும் சஞ்சு சாம்சனை கடுமையாக விமர்சித்த நிலையில் தான் பாஸ்கிதான் அணி வீரர் டேனிஷ் கனேரியா சஞ்சு சாம்சனை விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் “இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்துள்ளனர். ஏனெனில் பலரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இந்திய அணி மீது புகார் தெரிவித்தனர். அதனால் தற்போது இந்தியா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது

அதில் எப்போது நீங்கள் ரன்கள் அடிப்பீர்கள் சஞ்சு சாம்சன்? தற்போது அவருக்கு நிறை வாய்ப்புகள் கிடைத்து விட்டது. அவரை ஆதரித்து தொடர்ந்து வாய்ப்புகளை கொடுங்கள் என்று இந்திய அணியை விமர்சித்தவர்களில் நானும் ஒருவராக இருந்தேன். இருப்பினும் தற்போது கிடைத்த வாய்ப்புகளை பெரும்பாலும் அவர் பயன்படுத்தவில்லை என்று விமர்சித்து பேசியுள்ளார் சஞ்சு சாம்சன்.

இவர் சொல்வது போல சஞ்சு சாம்சனை இந்திய அணியில் எடுக்காத போது இவரை தற்போது விமர்சித்த பலர் அப்போது “சஞ்சு சாம்சனை ஏன் எடுக்கவில்லை, அவர் சரியாகத்தான் விளையாடுகிறார், சாராசரியும் அதிகமாக வைத்துள்ளார் என்று கூறியது நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் விளையாடியது அவர்களுக்கு தலைகுணிவை தந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றவது டி20 போட்டியில் அதிர்ஷ்டவசமாக சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ள அதே நேரத்தில் கடந்த போட்டிகளில் சொதப்பி வந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு இந்த போட்டியில் அநேகமாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை