“அப்போ அவ்வளவு சொன்னீங்க” ஆனா பணத்திற்காக இந்தியா வந்திருக்கீங்க.. முன்னாள் பாக் வீரர் ரமீஸ் ராஜாவை விமர்சித்த கனேரியா.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை தொடரானது நாளை தொடங்க இருக்கிறது. நாளை உலக கோப்பையின் நடப்பது சாம்பியனான இங்கிலாந்து அணியானது நியூசிலாந்து அணியை எதிகொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது உலகின் மிக அழகான கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை தொடரானது நாளை தொடங்க இருக்கிறது. நாளை உலக கோப்பையின் நடப்பது சாம்பியனான இங்கிலாந்து அணியானது நியூசிலாந்து அணியை எதிகொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது உலகின் மிக அழகான கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா வென்றிருந்தாலும் பல பிரச்சனைகள் அந்த தொடருக்கு முன்னதாக இருந்தது குறிப்பாக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்த நிலையில் அப்போது பாகிஸ்தான் அணியின் சேர்மேனாக இருந்த ரமீஸ் ராஜா இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் நாங்கள் உலக கோப்பை 2023 தொடரை புறக்கணிப்போம் என்றார்.

ஆனால் பின்னர் ஆசிய கோப்பை தொடரை நடந்தும் பாகிஸ்தான் ஹைபிரிட் முறையில் இலங்கையுடன் இணைத்து நடத்தியது. இந்நிலையில் அப்போது சர்ச்சை கருத்துக்களை கூறிய ரமீஸ் ராஜா தற்போது வர்ணனை செய்வதற்காக இந்தியா வந்த நிலையில் பலரும் விமர்சங்களை முன்வைத்தனர். அப்படிப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கனேரியா பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரமீஸ் ராஜாவை விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் யூடியூப் சேனனில் கொடுத்த பேட்டியில் “உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று அப்போது கூறினார். ஆனால் அவர் பணத்திற்காக இந்தியாவில் வர்ணனை செய்கிறார். அவர் சில துணிச்சலான கூற்றுக்களை முன்வைத்தார். நீங்கள் அத்தகைய அறிக்கைகளை வெளியிடும் போது, ​​நீங்கள் உங்கள் வார்த்தைகளில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன். இது சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம்.

பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லாது என்று அவர் கூறியிருந்தால், வர்ணனை செய்யும் வாய்ப்பை அவர் நிராகரித்திருக்க வேண்டும். இந்த யு-டர்ன் எனக்குப் பிடிக்கவில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வரிய சேர்மன் ரமீஸ் ராஜாவை மிகவும் கருமையாக் விமர்சித்துளார் கனேரியா.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியானது இந்தியா வந்த போது ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு அமோக வரவேற்ப்பு கொடுத்தனர். அதனை சுட்டி காட்டி பேசியுள்ள கனேரியா கூறுகையில் “பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது நமது இந்து கலாச்சாரம், நாங்கள் அதிதி தேவோ பாவத்தை நம்புகிறோம். எங்கள் நிலத்திற்கு யாராவது வந்தால், அவர்களை எப்போதும் இருகரம் நீட்டி வரவேற்போம். பாபர் ஆசாம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி போன்றவர்களுக்கு ரசிகர்கள் எப்படி கோஷமிட்டனர் என்பதை நாங்கள் பார்த்தோம். இது மிகவும் அற்புதமான சைகை” என்று கனேரியா கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை