அது என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம் – டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அறிவித்த டேவிட் வார்னர்.

உலகில் உள்ள சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்பட்டவர் டேவிட் வார்னர். சர்வதேச போட்டிகள் மட்டுமின்று ஐபிஎல் போட்டிளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அப்படியொரு நிலையில் கடந்த சில ஆண்டுகளால அவருடைய விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி வருகிறது. இது இந்த வருட ஐபிஎல் தொடரிலு

By ·

உலகில் உள்ள சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்பட்டவர் டேவிட் வார்னர். சர்வதேச போட்டிகள் மட்டுமின்று ஐபிஎல் போட்டிளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அப்படியொரு நிலையில் கடந்த சில ஆண்டுகளால அவருடைய விளையாட்டு கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகி வருகிறது. இது இந்த வருட ஐபிஎல் தொடரிலும் தெரிந்தது. இப்படியொரு நிலையில் வரும் ஆஸ்திரேலிய vs இந்திய டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிக்காக டேவிட் வார்னர் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.

மேலும் இந்த போட்டிக்கு பிறகு ஆத்திரேலியா ஜூன் 16ல் இருந்து 30 வரையில் இங்கிலாந்துடன் ஆஷிஸ் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கு அடுத்தாக டிசம்பரில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட இருக்கிறது. மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் கேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோத இருக்கிறது.

இப்படிபட்ட நிலையில் தான் கடந்த ஆஷிஸ் தொடரில் மோசமாக விளையாடிய பிறகு இந்த ஆஷிஸ் தொடர் டேவிட் வார்னரின் கடைசியாக இருக்கும் என்ற நிலையில் தான் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசியுள்ளார்.

டேவிட் வார்னர் கூறியது :

அவர் கூறுகையில் “6 டெஸ்ட் போட்டிளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வந்திருக்கிறோம். நான் என்னுடைய குடும்பத்திற்கு கடமை பட்டிருக்கிறேன். ரன்களை வரும் போட்டியில் அடித்தால் தொடர்ந்து விளையாடுவேன். ஆனால் நிச்சயமாக வெஸ்ட் இன்டியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட மாட்டேன். நான் வரும் உலகக்கோப்பை போட்டியில் நன்றாக விளையாடினாள் பாகிஸ்தானுக்கு எதிரான விளையாடும் தொடருடன் முடித்து விடுவேன்.

நான் விளையாடும் அனைத்து போட்டிகளையும் என்னயுடைய இறுதி போடியாகத்தான் நினைத்து விளையாடுகிறேன். அதுதான் நான் தான் என்னுடைய ஸ்டைல். என்னுடைய அணியுடன் விளையாடுவது பிடித்திருக்கிறது. இந்தியாவுடன் டெஸ்ட் போட்டி ஆரம்பித்து. தற்போது அது சவாலான போட்டியாக மாறியுள்ளது. அதற்கு பிறகு சர்வதேச போட்டிங்களில் விளையாடி என்னுடைய பார்மை தக்கவைத்து கொள்வதே என்னுடைய எண்ணமாக இருக்கிறது.

மேலும் நானா வரும் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். அதற்கு முன்னர் அதிக போட்டிகள் இருக்கிறது. ஓய்வுக்கு பிறகும் ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகள் இருக்கிறது என்று தெரிவித்தார் வார்னர். டேவிட் வார்னர் இதுவரையில் 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 8158 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை