ஓபனிங் ரொம்ப மோசமா இருந்தது – தோல்விக்கு பின்னர் டேவிட் வார்னர் கொடுத்த பேட்டி.
ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் முதலில் களமிறங்கிய சென்னை அணி டெல்லி அணியின் பௌலிங்கை கஷ்டபட்டு எதிர்கொண்டு வந்தனர். கான்வே
ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 55 போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் முதலில் களமிறங்கிய சென்னை அணி டெல்லி அணியின் பௌலிங்கை கஷ்டபட்டு எதிர்கொண்டு வந்தனர். கான்வே 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
அதற்க்கு பின்னரே ருதுராஜ் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேற ஆரம்பம் முதலே சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சற்று திணறியே வந்த சென்னை 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த 167 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. 168 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு பதிலுக்கு 140 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆகையால் 27 ரன்களில் சென்னை அணி வெற்றி பெற்றது.
மேலும் டெல்லி அணி இந்த போட்டியோடு’7 வது தோல்வியை பதிவு செய்தது. இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட் இல்லாததுதான்அணியின் நிலைத்தன்மையை பதித்தது.
இதனால் அடுத்த கேப்டனாக நியமிக்க பட்ட டேவிட் வார்னரினால் சரியாக கிரிக்கெட்டை விளையாட முடியவில்லை. பல போட்டிகளில் விரைவில் ஆட்டமிழந்தார். அப்படிபட்ட நிலையில் தான் இன்று டேவிட் டக் அவுட்டானார். இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய டேவிட் வார்னர் கூறுகையில்.
இந்த போட்டியில் தொடக்கத்திலே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்ட்டோம். அதுவும் முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தோம். தொடக்க வீரர்கள் மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கடுத்தே ரன் அவுட்டில் ஒரு விக்கெட்டை இழந்தோம். சொல்லப்போனால் நாங்களே விக்கெட்டுகளை கொடுத்து விட்டோம். இதனால் எங்களின் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டது.
— Ninja (@IPLcskMSD) May 11, 2023
முதல் இன்னிங்கில் எடுத்த ஸ்கோர் சுலபமாக பெறக்கூடியதாக இருந்தது. எங்களுக்கு முதல் சிக்ஸர் தேவைப்பட்டது. ஆனால் அதனால் பல விஷியங்களை முயற்சி செய்தோம் ஆனால் எங்களினால் முடியவில்லை. உங்களுக்கு சில ரன் எடுக்கும் பந்துகள் கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு ரன்களை எடுக்க வேண்டும். ஆனால் அதனை நாங்கள் சரியா செய்யவில்லை என்று வருத்தம் தெரிவித்தார் டேவிட் வார்னர்.