பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது, ஆனால் நாங்கள் வெற்றி பெற இவர்கள் தான் காரணம் – டேவிட் வார்னர்.
ஐபிஎல் 2023 தொடரின் 64வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டெல்லி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியதும் டேவிட் வார்னர் விறுவிறுப்பான தொடக்கம் அளித்து பெவிலியன்
ஐபிஎல் 2023 தொடரின் 64வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டெல்லி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியதும் டேவிட் வார்னர் விறுவிறுப்பான தொடக்கம் அளித்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து 38 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்திருந்த பிருத்வி ஷா பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ரிலே ருஸ்ஸோ, பில் சால்ட் ஆகியோரும் அதிரடியாக பேட்டிங் செய்தனர். ரிலே ரூசோ 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே நேரத்தில், சால்ட் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 213 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்கில் சாம் கரன் மட்டுமே 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.
அதற்கு பிறகு 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்த களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. ஷிகர் தவான் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பிறகு பிரப்சிம்ரன் சிங் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அதர்வா டெய்டே மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இன்னிங்ஸைக் கையாண்டனர். டெய்ட் 42 பந்துகளை எதிர்கொண்டார் மற்றும் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்த பிறகு காயம் அடைந்தார்.
டேவிட் வார்னர் :
அதற்கு லிவிங்ஸ்டன்னை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் ஜொலிக்காத நிலையில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற பிறகு டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முடிவு நிகழ்ச்சி விழாவில் பேசுகையில் “எங்களுடைய பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. நாங்கள் எங்களுடைய பலத்தை நம்பினோம். நல்ல விக்கெட்டில் விளையாடியது பெற்றி பெற உதவியது. டெல்லி மைத்தனத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலானது என்றார் டேவிட் வார்னர்.
மேலும் பேசிய வர கூறுகையில் “பிரதிவ் ஷாவின் விளையாட்டு பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. ரிலே ருஸ்ஸோவும் சிறப்பாக செயல்பட்டார். எங்கள் சொந்த மைதானத்தில் எங்களுக்கு நிலைத்தன்மை தேவைப்பட்டது. ஆனால் எங்களுடைய சொந்த மைத்தனத்தில் சரியாக செயல்பட முடியவில்லை. இருந்த போதிலும் இன்றிரவு இரண்டு புள்ளிகளைப் பெற்றதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார் டேவிட் வார்னர்