ஏன் ஹைதராபாத் அணி இப்படி செய்தது என்று தெரியவில்லை.. மனசு வலிக்குது – டேவிட் வார்னர் பேச்சு.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர். சொல்லப்போனால் அவர்க்கு இந்திய ரசிர்களுக்கு இருக்கும் பிணைப்பு எதோ இந்திய வீரர்களுக்கு ஆதரவு தருவது போல இருக்கும். அப்படிப்பட்ட ரசிகர்களை கொண்டவர் டேவிட் வார்னர். அதற்கு மு

By ·

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர். சொல்லப்போனால் அவர்க்கு இந்திய ரசிர்களுக்கு இருக்கும் பிணைப்பு எதோ இந்திய வீரர்களுக்கு ஆதரவு தருவது போல இருக்கும். அப்படிப்பட்ட ரசிகர்களை கொண்டவர் டேவிட் வார்னர். அதற்கு முக்கியமான காரணம் அவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடியதுதான்.

சொல்லப்போனால் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக டேவிட் வார்னர் தான் முதல் ஐபிஎல் கோப்பையை அந்த அணிக்காக வென்று கொடுத்தார். மேலும் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராகவும் இருந்தார். மேலும் தன்னுடைய பிணைப்பை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வார்னர் சினிமாவை துணையாக எடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார். ஆனால் திடீரென எல்லாமே மாறியது.

அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி மோசமாக விளையாடி கொண்டிருந்தது. அப்போது திடீரென விளையாடும் அணியில் இருந்தும், கேப்டன் பதவியில் இருந்தும் வார்னர் நீக்கப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 2022ஆண்டிற்கு பிறகு டேவிட் வர்னரை கைவிட்டது ஹைதராபாத். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் டேவிட் வார்னர்.

இந்நிலையில் தான் சமீபத்தில் இந்திய வீரரான அஸ்வினுடன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டேவிட் வார்னர் தன்னை ஹைதராபாத் அணியின் சோசியல் மீடியா பிளாக் செய்து விட்டதாகவும். அதற்கான காரணம் என்னவென்று தனக்கு தெரியவில்லை என்றும் விளக்கமாக கூறியிருந்தார்.

அவர் பேசுகையில் : அது மனதிற்கு கடினமாக இருந்தது. ஏனெனில் அது ரசிகர்களுக்கு வலித்தது போன்ற உணர்வு. எனது கருத்துப்படி வீரர்களுக்கு மிக முக்கியமான உறவு ரசிகர்கள் தான். ரசிகர்களுடன் நான் கொண்டிருந்த ஈடுபாட்டுடன், அணியுடன் இருந்தது மிகவும் நன்றாக இருந்தது. எனவே அவர்களுடன் தொடர்ப்பு கொள்வது என்னுடைய கடமையாக உணர்ந்தேன்.

மேலும் சோசியல் மீடியாவில் ஹைதராபாத் அணி டேவிட் வார்னரை பிளாக் செய்த்தாக கூறிய வர பேசுகையில் : நான் ஏன் பிளாக் செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் SRH க்காக சமூக ஊடகப் பக்கத்தில் நிறைய ரசிகர்களுடன் ஈடுபாட்டுடன் இருப்பேன். ரசிகர்கள் மீண்டும் வருவதை உறுதிசெய்து, அவர்களுடன் ஈடுபடுவது எனது கடமையாக உணர்ந்தேன்.

ஆனால் பிளாக்கிங் புள்ளியில் இருந்து பார்க்கும் போது அது எனக்கு கொஞ்சம் விநோதமாக இருந்தது. ஏனென்றால் நான் சுமார் 5 ஆண்டுகளாக அமர்ந்திருக்கிறேன். இருந்த போதிலும் இன்னும் என் சோசியல் மீடியா பக்கத்திற்கு வந்து பேசும் ரசிகர்களைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் டேவிட் வார்னர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை