ஐபிஎல் போட்டியில் சாதனை படைத்தும் பரிதாப நிலையில் டேவிட் வார்னர் .
ஐபிஎல் 2023 இன் 11வது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்ற பிறகு பந்து வீச முடிவு செய்திருந்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில்
ஐபிஎல் 2023 இன் 11வது ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்ற பிறகு பந்து வீச முடிவு செய்திருந்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னி எடுத்த ராஜஸ்தான் :
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டியில் டாஸ் இழந்த ராஜஸ்தான் அணி வலுவான தொடக்கத்தை பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியாக பேட்டிங் செய்தனர். ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் அரைசதம் அடித்தனர். ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் 11 பவுண்டரிகள்-1 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்தார், பட்லர் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள்-1 சிக்ஸர் உதவியுடன் 79 ரன்கள் எடுத்தார்.
அதற்கு பிறகு இருவரும் ஆட்டமிழந்த நிலையில் ஷிம்ரோன் ஹிட்மியர் அதிரடியாக ஆடினார். அவர் 21 பந்துகளில் 4 சிக்ஸர்-1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியை பொறுத்த வரையில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் ரோமன் பவல் 1-1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள் இருந்தாலும் அது சரியாக இருக்கவில்லை.
Prithvi Shaw 's horror run with the bat continues.
— Cricopia.com (@cric_opia) April 8, 2023
Trent Boult is breathing fire, 2 wickets in 2 balls 🔥 ⚡ 🎯 #PrithviShaw #Manishpandey#Trentboult #RRvsDC #DCvsRR#RRvDC #SanjuSamson #IPL23#TATAIPL2023 #TATAIPL #IPL #CricketTwitter #cricket pic.twitter.com/mZSCJklRa5
இந்நிலையில் 200 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. தொடக்கத்திலேயே பெவிலியன் திரும்பினார் பிருத்வி ஷா. அதற்கு பிறகு மணீஷ் பாண்டேவும் ஆட்டமிழக்க டெல்லியால் மீள முடியாத அளவிற்கு ரன்கள் அதிகரித்து.இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் டேவிட் வார்னர் 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். வார்னர் 55 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் தோல்வியடைந்தனர்.
இந்நிலையில் வார்னர் அரை சதம் எடுத்த பிறகு அவர் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். இந்நிலையில் அடுத்த வந்த பேட்ஸ்மேன்களால் வேக பந்துகளை அடிக்க முடியாத நிலயில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இது டெல்லி அணியின் இரண்டவது தோல்வியாகும். ஐபிஎல் போட்டிகளில் வேகமான 6000 ரன்கள் எடுத்திருந்தாலும் 3 தொடர் தோல்வியினால் மனமுடைந்து போன டேவிட் வார்னர் அமைதியாக இருக்கையில் அமர்ந்திருந்தார்.
கடைசி வரையில் முயற்சி செய்த வார்னர் :
ஆனால் இந்த போட்டியில் டெல்லி தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணம் சரியான பீடிங் இல்லை. அதோடு வேகப்பந்து வீச்சளர்கள் சரியாக வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவில்லை. இருந்த போதிலும் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஒரு கேப்டனாக என்ன செய்யமுடியுமோ அதனை செய்தார். அதே போல அரை சதம் அடித்த பிறகு சேட்ச் கொடுத்தார். ஆனால் பில்டர்கள் உள் வலயத்திற்குள் இருந்ததினால் அது நாட் அவுட். அதற்கு பிறகு அதிரடியாக ஆட முயற்சி செய்து தன்னுடைய விக்கெட்டை இழந்தார் டேவிட் வார்னர்.