“என்னை சர்வதேச போட்டிகளில் தடை செய்த போது எனக்கு இப்படி தான் இருந்ததது.” 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியது குறித்து பேசிய டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் விளையாடி வருகிறார். அவர் தனது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறு
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் விளையாடி வருகிறார். அவர் தனது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக 2024ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் ஓய்வு குறித்து பேசியிருந்தார்.
ஆஸ்திரேலியா அணிக்காக அவர் 2009 ஆம் ஆண்டு அறிமுகமாகிய பின்னர் 2015 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாகவும் அவர் அணியில் இருந்து வந்தார். மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே சற்று சொதப்பி வரும் நிலையில் அவர் ஓய்வு பெறுவது குறித்து முன்கூட்டியே அறிவித்து இருந்தார். ஆனால் இன்று அதனை அவர் உறுதிப்படுத்தி இருந்தார்.
மேலும் அவர் 2018 ஆம் ஆண்டு போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக அவருக்கு சர்வதேச போட்டிகளில் அவரை ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது என்னவென்று பார்த்தால் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுபயணத்தின் போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்மித் துணை கேப்டனாக டேவிட் வர்ணரும் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராப்ட் அவர்கள் சிக்கினார்கள்.
எந்த அது குறித்து விசாரணை நடத்திய பின்பு அவர்கள் மூவருக்கும் ஒரு ஆண்டு முழுவதும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இது ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்திற்கு மிக பெரும் அவமானத்தை ஏற்படுத்தி தந்திருந்தது. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மீது வெற்றி அழுத்தத்தை ஏற்படுத்தியதாலயே அவர்களது போன்று தவறான முறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் என்றும் பல ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்தை கட்டும் சாடியிருந்தனர்.
இதில் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதை அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டனர். இது குறித்து டேவிட் வார்னர் எந்த ஒரு கருத்தையும் அவர் வெளிப்படையாக அவர் பேசியதில்லை. இது குறித்து அவர் கூறுகையில், பந்தை சேதப்படுத்தி அந்த ஒட்டு மொத்த காலத்தையும் நினைத்து பார்க்கும் போது அதில் எனக்கு எந்த விதமான வருத்தமும் கிடையாது. நீங்கள் முன்னேறி நகர வேண்டும் என்றால் உங்களது வாழ்வில் பலவிதமான தடைகள் வரும் எனக்கு எப்போதும் கிரிக்கெட்டில் மீது ஆர்வம் இருக்கின்றது.
ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். அதன் பின் நான் ஐபிஎல் மற்றும் ஐ எல் டி 20 போன்ற போட்டிகளில் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்துவதற்கான வாய்ப்புகளும் எனக்கு கிடைத்தது அதில் என்னுடைய கேப்டன்ஷி பதவியை நான் மகிழ்ச்சியுடன் செய்தல் என்றும் அவர் கூறியிருந்தார். ஒரு நாள் போட்டியில் கோப்பையை வென்று தனது ஓய்வை அவர் அறிவித்து இருந்தார்.