“புஷ்பானா Flowerனு நெனைச்சீங்களா Fire uh..” சதத்திற்கு பின் புஷ்பா பட வசனத்தில் வருவது செய்து காட்டிய டேவிட் வார்னர்.
சதம் அடித்த பின் புஷ்பா படத்தில் வரும் காட்சி போல மைதானத்தில் அது போல் செய்து ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்த
சதம் அடித்த பின் புஷ்பா படத்தில் வரும் காட்சி போல மைதானத்தில் அது போல் செய்து ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது சின்னசாமி மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்திய அணியிடம் தோற்ற பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு கொஞ்சம் கேள்விக்குறியாக நிலையில் தான் இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகமாக திணறினார்கள். இதனால் அதனையும் சரி செய்ய வேண்டிய நிலையில் பாகிஸ்தான் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அவர்களின் முடிவு சரிதானா என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால் சின்னசாமி மைதானம் அளவில் சிறியது. இதனால் பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் முதல் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிச்செல் மார்ஷ் களமிறங்க முதல் பந்தே ரீவிவ் கேட்டனர் பாகிஸ்தான்.
ஆனால் அந்த ரீவிவ் தோல்வியில் முடியவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலியா தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது. டேவிட் வார்னர் மற்றும் மிச்செல் மார்ஷ் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்க இவர்களின் பாட்னர்ஷிப் 30வது ஓவரில் 200 ரன்களை கடந்தது. மேலும் சிறப்பாக விளையாடிய வார்னர் 85 பந்துகளில் சதம் அடிக்க மார்ஸ் 100 பந்துகளில் சதம் அடித்தார்.
சின்னசாமி ஸ்டேடியத்தில் கூடியிருந்த மக்கள் வெறித்தனமாக சென்று அவருடன் அவரது சதத்தை கொண்டாடினர். அதன் பின்பு டேவிட் வார்னர் இந்திய நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது சமீபத்திய திரைப்படமான ‘புஷ்பா’வின் பெரிய ரசிகர். “புஷ்பா” திரைப்படத்தில் இருந்து அல்லு அர்ஜுன் “புஷ்பா னா flower நினைச்சியா Fire” என்ற வசனத்தில் போல ஒரு செயலையும் செய்து முடித்தார். அதன் பின் அவர் 163 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது பாகிஸ்தான் அணி 368 ரன்களை எடுத்தால் வெற்றி என்று விளையாடி கொண்டுள்ளது.