சொந்த மண்ணில் மண்ணை கவ்விய DC – பழிக்கு பழி வாங்கிய SRH.

இந்தியன் பிரீமியர் லீக்கில் 40 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் புள்ளி பட்டியலில் முறையே ஹைதராபாத் அணி 9 இடத்திலும் டெல்லி அணி 10 இடத்திலும் இருந்து வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசஸ் அணியின் கேப்டன

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கில் 40 வது ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ்  அணியும் மோதின. இவ்விரு அணிகளும் புள்ளி பட்டியலில் முறையே ஹைதராபாத் அணி 9 இடத்திலும் டெல்லி அணி 10 இடத்திலும் இருந்து வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க அட்டகரரான மயங்க் அகர்வால் தடுமாறி வந்த நிலையில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின் வந்த ராகுல் த்ரிபாதி 10 ரன்களிலே மிட்செல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறிய அபிஷேக் ஷர்மா அரை சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் கேப்டன் மார்க்ரம் 8 ரன்களில் ஜொலிக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்க்கு பின் வந்த ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பின் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் ஷர்மாவும் 67 ரன்களில் அவுட்டாகி. வெளியேறினார். டெல்லி அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் சன்ரைசஸ் அணி தடுமாறி வந்தது.

அப்துல் சமத் மற்றும் க்ளாசென் இணைந்து அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தி வந்தனர். அப்துல் சமத்தால் நிலைத்து நிற்க முடியாமல் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சன்ரைசஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர். இருப்பினும் க்ளாசென் தனது அதிரடி பாணியைவிடாமல் அணியின் ஸ்கோரை உயர்த்த, அவருடைய அரை சதத்தையும் பூர்த்தி செய்தார். சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது.

டெல்லியின் ஆட்டம் :

198 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் கண்ட டெல்லி அணிக்கு ஆரம்பமே சோதனையாக, கேப்டன் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் வந்த மிட்சல் மார்ஷ் பிலிப் சால்டுடன் ஜோடி சேர்ந்து இலக்கை அடைய ரன்களை குவித்து வந்தனர். அதிரடியை தொடர்ந்து வந்த பிலிப் சால்ட் 39 பந்துகளில் 59 ரன்களை குவித்து ஹைதராபாத் அணியின் பௌலிங்கை சிதறடித்தனர். அதன் பின் வந்த மனிஷ் பாண்டே 1 ஆட்டமிழக்க, மார்ஷ் 63 ரன்களை அடிதிருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அதன் பின் டெல்லி அணியின் வீரர்கள் பேட்டிங் செய்ய கஷ்டப்பட்டு வந்தனர். பிரியம் கார்க் 12 ரன்களில் மார்கண்டேவிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவருக்கு பின் சப்ராஸ் கான் 9 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். டெல்லி அணி ஹைதராபாத் அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர். டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது, சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.                        

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை