“எங்களுக்கு இது ஒரு பெரிய வெற்றி தான். ஆனாலும் இன்னும் நிறைய போட்டிகள் இருக்கிறது.” வெற்றி குறித்து பகிர்ந்த டி காக்.

வெற்றி பெற்றது குறித்து பகிர்ந்த டி காக். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியாஅணி ஐந்தாவது போட்டியில் இந்தியா அணியை எதிர் கொண்டது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்

By ·

வெற்றி பெற்றது குறித்து பகிர்ந்த டி காக். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியாஅணி ஐந்தாவது போட்டியில் இந்தியா அணியை எதிர் கொண்டது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் இன்று சவுத் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான போட்டியில் வென்று தீர வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. அதில் டாஸ் என்ற ஆஸ்திரேலியா அணி முதலில் தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களான டீ காக் மற்றும் பவுமா களம் இறங்கினார்கள். இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா பந்து சமாளித்து தென்னாப்பிரிக்கா அணிக்கு ரன்களை குவித்து வந்தனர். பவுமா 35 ரன்களில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வான் டெர் டுசென் நிதானமாக விளையாட 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேற அதன் பின்பு டீகாக் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.

ஆனால் அவரும் சதத்தை பூர்த்தி செய்த கையோடு நிலைத்து நின்று விளையாடாமல் 109 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்குப் பின் வந்த மார்க்கம் 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேற கிளசென் 29 ரன்களிலும் ஜான்சன் 26 ரன்களில் அவுட்டாகி வெளியேற அதன் பின் நிர்ணயிக்க 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் களை இழந்து 311 ரன்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஸ்கோராக டீகாக் 109 ரன்களை அடித்து இருந்தார்.

312 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பம் பெருத்த அடியாக இருந்தது. மார்ஷ் 7 ரன்கள் அவுட் ஆகி வெளியேற ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே சோனையாக மாறியது. அவர் சென்ற வேகத்திலேயே அடுத்த ஓவரில் டேவிட் வார்னரும் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். நிதானமாக விளையாட நினைத்து விளையாடி வாழ்ந்த ஸ்மித் 19 ரன்களில் அவுட் ஆகி வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

அதன் பின் வந்த ஜாஸ் இங்லீஸ் ரன்களை குவிப்பார் என்று எண்ணிய நிலையில் வேகத்திலேயே ஜாஸ் இங்கிலீஷ் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அணியின் ஸ்கோர் 65 என இருந்த நிலையில் மேக்ஸ்வெல் 3 ரன்னிலே வெளியேறினர். ஸ்டாய்னிஸ் 5 ரன்னிலே வெளியேற அணியின் தோல்வி கிட்ட தட்ட உறுதியாகி விட்டது. அதன் பின் வந்த அனைத்து வீரர்களும் அவுட் ஆகி வெளியேற 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது ஆஸ்திரேலிய அணியின் இரண்டவாது தொடர் தோல்வியாகும்.

டீ காக் கூறியது :

சிறுவர்களுக்கு இது ஒரு பெரிய வெற்றி, உண்மையைச் சொன்னால், மைதானம் எப்படி விளையாடும் என்று எங்களுக்குத் தெரியாது, நிலைமைகளை அழகாக மதிப்பீடு செய்தோம், பின்னர் பேட்டை நன்றாகப் பயன்படுத்தினோம். 311 ரன்களுக்கு அதிகமான ஸ்கோராக இருந்தது, நான் இங்கு லக்னோ அணிக்காக விளையாடியுள்ளேன் (ஐபிஎல்லில்), இரண்டாவது பேட் செய்வது கடினமாகிறது. விக்கெட் கொஞ்சம் மாறுகிறது.

அது வியர்வை மற்றும் ஈரப்பதமாக இருந்தது, பந்து வீச்சாளர்கள் தங்கள் ஆட்டத்தில் சிறந்து விளங்கினர். நாங்கள் எங்களை நிரூபிக்க ஆர்வமாக உள்ளோம் என்று நினைக்கிறேன், நாங்கள் நன்றாக விளையாடினோம், ஆனால் இது வெறும் 2 ஆட்டங்கள் தான், உலகக் கோப்பை ஒரு நீண்ட போட்டி மற்றும் விளையாட்டுகள் விரைவாக வரும், நாங்கள் அதை மேட்ச் பை மேட்ச் அடிப்படையில் எடுப்போம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை