“டி காக் வேறு மாதிரியான ஓய்வை விரும்பி இருப்பார். ஆனால்..” – வேதனையாக பேசிய பவுமா.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளது அதில் நேற்று முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் பல பரிட்சை செய்தது அதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளது அதில் நேற்று முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் பல பரிட்சை செய்தது அதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றைய போட்டிக்கான ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது இதில் ஆஸ்திரேலியா அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. இதில் வெற்றி பெறும் அணியானது 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மோதும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது அவர்களுக்கு இந்த உலக கோப்பை தொடரில் சேசிங் என்றால் அது சரியாக வரவில்லை. அவர்கள் முதலில் பேட்டிங் செய்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடாத காரனத்தால் தென்னாபிரிக்கா அணியானது 49.4 அவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அணியின் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்களையும் கிளாசன் 47 ரன்களையும் கோட்ஸி 19 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர்.
ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா மூன்று விக்கேட்டுகளையும் ஹசில்வூட் மற்றும் ஹெட் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். எனவே ஆஸ்திரேலியா அனைத்து தென் ஆப்பிரிக்கா எளிதாக சுருட்டியது. 213 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கி ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் இருந்து சிறந்த அடித்தளம் அமைத்து ஓப்பனார்கள் சிறப்பாக விளையாடினர்.
எனவே ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்த நிலையில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 19ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி அணியை மோத உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ஹெட் 62 ரன்களையும் ஸ்மித் 30 ரன்களையும் வார்னர் 29 ரன்களை அடித்து இருந்தனர். எனவே ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்தியா அணியை சந்திக்கவுள்ளது. தோல்வி குறித்து பேசிய பவுமா கூறுகையில்,
இதை வார்த்தையில் சொல்வது மிகவும் கடினம். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள். நாங்கள் தொடங்கிய விதம் மிகவும் மோசமாக இழந்தோம். ஆனால் அவை உண்மையில் எங்களுக்கு அழுத்தத்தை அளித்தன. [கிளாசென் வெளியேறிய போது அந்த நேரத்தில் நாங்கள் வேகத்தை அதிகரித்துக் கொண்டிருந்தோம். டேவிட் மில்லர் ஒரு வீரராக தன்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் அவரது மனநிலையையும் காட்டினார். சிறப்பாக பந்துவீச வேண்டும் என்று விரும்பியிருப்பேன், மற்ற பேட்டர்கள் தங்களை விளையாட அனுமதித்தார்.
ஷம்சி மிகச்சிறப்பாக இருந்தார், நாங்கள் போட்டியாளர்களாக இருந்தோம், ஆனால் சரியாக செல்ல எங்களுக்கு நிறைய விஷயங்கள் தேவைப்பட்டது. எங்களுக்கு வந்த நிறைய கேட்ச்களை கிழே விட்டுவிட்டோம். இன்னும் சுறுசுறுப்பாக இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் வழியில் செல்ல உங்களுக்கு விஷயங்கள் தேவை. கோட்ஸி ஒரு இளைஞனாக அவர் ஒரு போர்வீரன். அவர் அப்படிப் பந்துவீசி ஸ்மித்தின் விக்கெட்டைப் பெற்று, எங்களை மீண்டும் ஆட்டத்திற்குத் திரும்பச் செய்ய பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அவர் தசைப்பிடிப்பு வரை சென்றுகொண்டிருந்தார். [டி காக்] சிறந்த போட்டி. வித்தியாசமான குறிப்பில் முடிக்க விரும்புவார், ஆனால் ஒரு குழுவாக நாங்கள் காட்டிய சண்டையை அவர் நினைவில் வைத்திருப்பார். நாங்கள் அவருடன் விளையாடி மகிழ்ந்தோம், SA இல் அவர் விளையாட்டின் லெஜண்டாக இறங்குவார். என்றும் அவர் கூறினார்.