ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வருவது மும்பை அணிக்கு வருவது இன்னும் பக்கபலமாக இருக்கும் – டிவில்லியர்ஸ்

ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத்

By ·

ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இவர் கேப்டனாக பதவி வகித்த முதல் போட்டியிலேயே கோப்பையை குஜராத் அணிக்கு பெற்று தந்தார்.

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி வரை சென்று சென்னை சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்ற ஒரு அணியின் கேப்டனை மற்ற அணிக்கு வர வைப்பதற்காக பேரம் பேசி இருப்பது இதுதான் முதல் முறையாகும். குஜராத் அணி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் அந்த அணி அறிமுகமானது அப்போது அந்த அணியின் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியின் கேப்டனாக நியமித்தது. இதற்கு முன்பாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார்.

அவருக்கு காயம் ஏற்படவே அவரால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியாக விளையாட முடியவில்லை. அதன்பின் காயம் சரியான பின் அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று பலம் வாய்ந்த அணி என்று அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பான கேப்டனாக இருந்த போதும் மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்குவதற்காக குஜராத் அணியிடம் பேரம் பேசி உள்ளது. குஜராத் அணியும் அவரை மும்பை அணிக்கு அனுப்பி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மும்பை அணி யாரையும் குஜராத் அணிக்கு அனுப்பவில்லை.

2023 ஐபிஎல் தொடரின் போது குஜராத் அணியின் உரிமையாளருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அதனை அடுத்து அவர் அணியை விட்டு விலக முடிவை அப்போதே எடுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை அப்போது அணியில் இருந்து மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டது என்று அம்பானி தரப்பில் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. ஏலம் இல்லாமல் இது போன்ற அணியில் இருக்கும் வீரரை மற்றொரு அணிக்கு மாற்றம் செய்யும்போது அதற்கு பதிலாக மாற்று வீரரை மும்பை அணி குஜராத் அணிக்கு அளிக்க வேண்டும்.

இது குறித்து டிவில்லியர்ஸ் கூறுகையில் ரோஹித் ஷர்மா ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக ஆக்கப் போறார் என்பது எனக்கு மிகவும் வியப்பான செய்தியாக இருக்கின்றது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக அதனை சிறப்பாக வழி நடத்திச் சென்றார். அதில் நிறைய அழுத்தங்கள் இருந்தாலும் அவர் சிறப்பாகவே செய்து இருந்தார்.

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவது மிகப்பெரிய செய்தி. அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர். அவர் மீண்டும் வாங்கடே மைதானத்தில் விளையாட விரும்புபவர். குஜராத் அணிக்கு ஒரு முறை கோப்பையும் அவர் என்று உள்ளார். அங்கு தன்னுடைய நேரம் முடிந்து விட்டதாக ஹர்திக் பாண்டியா கருதுகிறார் என்று டிவில்லியர்ஸ் கூறி இருந்தார்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை