ஹைதராபாத் அணி நிர்ணயித்த இமாலய இலக்கு.. அதிரடி பேட்டிங்கை மறந்து போன ரிஷப் பண்ட். மேலும் ஒரு தோல்வியில் டெல்லி அணி
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 35 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 35 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஐபிஎல்லில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இது தான். டெல்லி அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வர இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
ஹைதராபாத் அணி இந்த வருட ஐபிஎலில் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே புது புது சாதனைகளை அவர்கள் படைத்தது இருந்தார்கள்.அதற்க்கு கரணம் அவர்களது பேட்டிங் தான். ஆரம்பம் முதலே அவர்கள் தங்களது அதிரடியை காட்டி எதிர் அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தது. இந்த போட்டியிலும் ஹைதராபாத் அணிக்கு அவ்வாறு தான் இருந்தது. டெல்லி அணியின் பந்துவீச்சை அவர்கள் அதிரடியாக அடித்து நான்கு பக்கமும் சிதறடித்து இருந்தது. டெல்லி அணியின் வீரகள ரன்களை வாரி வழங்கி இருந்தனர்.
இருப்பினும் டெல்லி அணியின் குல்தீப் யாதவ் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ந்த போட்டியிலும் ஆரம்பத்தில் பல சாதனைகள் உடைக்கப் பட்டது. அது என்னவென்று பார்த்தல் 5 ஓவர்களில் 100ரன்களுக்கு மேல் அடித்ததும் அதே போல் பவர்ப்ளே ஓவர் முடிவில் 120 ரன்களையும் பதிவு செய்து சாதனை செய்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 266 ரன்களை அடித்து இருந்தது.
இதில் அதிகபட்சமாக ஹெட் 89 ரன்களும் ஷபாஸ் அகமது 59 ரன்களும் அபிஷேக் ஷர்மா 46 ரன்களையும் அடித்து இருந்தனர். ல்லி அணி சார்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளையும் அக்சர் மற்றும் முகேஷ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். அதன் பின் 267 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்து தங்களது அதிரடி பேட்டிங்கை காட்டி இருந்தனர். இருப்பினும் அவ்வபோது இடையில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவில் அவர்களால் 199 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
எனவே ஹைதராபாத் அணி 67 ரன்களில் வேரடி பெற்றது. இதில் டெல்லி அணியின் அதிக பட்சமாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்களையும் ரிஷப் பண்ட் 44ரன்களிலும், போரேல் 42 ரன்களையும் அடித்து இருந்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பில் நடராஜன் 4 விக்கெட்டுகளையும் மார்கண்டே மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். கடைசி ஓவர் வரை போராடிய நிலையிலும் டெல்லி அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது