ஒரே ஓவரில் 4,4,6,4,4 – பௌலர்களை பந்தாடிய கான்வே, வீடியோ உள்ளே.
ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. சன்ரைசஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு முறை கூட சென்னை அணிக்கு எதிராக வென்றது கிடையாது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோ
ஐபிஎல் 2023 க்கான 29 லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. சன்ரைசஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு முறை கூட சென்னை அணிக்கு எதிராக வென்றது கிடையாது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி சன்ரைசஸ் அணியின் தொடக்க அட்டகரர்களான ப்ரூக் மற்றும் அபிஷேக் களமிறங்கினார்கள்.
— Ninja (@IPLcskMSD) April 21, 2023
Devon Conway Marco yansen over 23 runs pic.twitter.com/KfFfeTPQML
— IPL lovers 🥰🥰💓💓💓💘💘 (@ManavTanka5431) April 21, 2023
சென்னை அணியின் பௌலிங்கை சமாளித்து நிதானமாகவே விளையாடி ரன்களை சேர்த்தனர். ப்ரூக் ரன்களை உயர்த்தும் முயற்ச்சியில் ஆகாஷ் சிங்கிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்நிலையில் சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க கஷ்டப்பட்டு வந்த நிலையில் தான் ஜடேஜா வீசிய பந்தில் அபிஷேக் 34 ரன்களிலே வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் வந்த நிலையிலிருந்தே சென்னை அணியின் பந்து வீச்சை விளையாட முடியாமல் திணறி வந்தனர்.
ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து 3 ஓவர்களில் சுழலில் சிக்கி த்ரிப்பாதி, மயாங்க் அகர்வால் விக்கெட்டை இழந்தனர். அணியின் கேப்டன் மார்க்ரம் ஜொலிப்பர் என எதிர் பார்த்த நிலையில் தீக்ஷானா விடம் 12 ரன்களிலே வெளியேறினார். அற்புதமாக பந்து வீசிய சென்னை ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். கடந்த போட்டிகளில் சென்னை அணிக்கு பௌலிங் சரியாகவே இல்லாமல் இருந்தது, ஆனால் அதை இந்த போட்டியில் அது சிறப்பாக அமைந்தது.
சன்ரைசஸ் அணிக்கு ஆரம்பம் முதலே சொதப்பி வந்தன. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில் கடந்த போட்டிகளை பார்க்கும் போது சென்னை அணியின் பந்துவீச்சு அதிகம் முன்னேறி உள்ளது நன்டர்கவே தெரிகிறது. அதே போல கடந்த போட்டிகளை போல இல்லாமல் பிலேடிங் மிகவும் சிறப்பாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படியொரு நிலையில் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் மற்றும் கான்வே சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகின்றனர். அப்படியொரு நிலையில் தான் மார்கோ ஜான்சென் 5 ஓவரை போடும் போது முதல் 5 பந்துகளில் 4,4,6,4,4 என 22 ரன்கள் அடித்து ஹைதராபாத்தை ரசிகர்களை கலங்க விட்டார் கான்வே அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.