நான் CSK அணியின் முன்னாள் வீரரை போல ஆட விரும்புகிறேன் – தோல்விக்கு பிறகு பேட்டியளித்த டேவின் கான்வே.
நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சென்னை சார்பாக டேவின் காணவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 ரன்களை விளாசினார். அதோடு கடைசி ஓவரில்
நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சென்னை சார்பாக டேவின் காணவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 ரன்களை விளாசினார். அதோடு கடைசி ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்களை விளாசிய நிலையில் சென்னை 200 ரன்களை எடுத்தது.
இந்நிலையில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. கடைசி ஓவரில் 3 சிறப்பாக பதிரினா பந்துவீசினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சொந்த மைதானத்தில் தோற்கடித்தது பஞ்சாப். அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மேலும் தொடந்து இரண்டாவது தோல்வியை தழுவிய சென்னை தற்போது புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது.
டேவின் கான்வே கூறியது :
போட்டியின் இடைவெளியின் போது நான் விக்கெட் மெதுவாக வருவதை நான் உணர்ந்தேன், அதனை அணியினருக்கும் கூறினேன். 200 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ஒன்றுதான் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். அதோடு 200 ரன்கள் என்பது இந்த மைதானத்திற்கு முக்கியம். சவாலான இலக்கை நாங்கள் வைத்தாலும் தோல்வியடைந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை வருத்தமாக இருக்கிறது.
சில விஷியங்களை எளிதாக வைத்திருப்பது என்பது கடினம், திட்டத்தில் ஒண்டியிருப்பது சிக்கலான விஷயம் கிடையாது. டி20 போட்டிகளில் ஏற்றமும், இரக்கமும் சகஜம். நான் ஒரு கிரிக்கெட் வீரராக மைக் ஹஸ்ஸி போல விளையாட விரும்புகிறேன். மைக் ஹஸ்ஸி ஆஸ்திரேலிய மைதானத்தில் மட்டுமல்லாமல் சென்னை அணியாகவும் ஆடிய அனுபவம் உடையவர். அவரை போல நானும் இங்கு அதிக போட்டிகளை விளையாட முயற்சி செய்கிறேன்.
Best cover drive of #IPL2023 so far? 🤔
— JioCinema (@JioCinema) April 30, 2023
Tell us your nominations below!#IPLonJioCinema #CSKvPBKS #TATAIPL | @ChennaiIPL pic.twitter.com/YfcBJExM3v
ருதுராஜ் மற்றும் ரஹானே உடன் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களால் ஒரு பாட்னர்ஷிப்பை உருவாக்க முடிந்தால் அது போட்டிக்கு உதவியாக இருக்கும் என்றார். டேவின் கன்வேவை பொறுத்தவரையில் தொடக்கத்தில் சில போட்டிகளில் திணறினாலும் அதற்கு பிற்காடு சுதாரித்து கொண்டு இதுவரையில் 5 அரை சதங்களை அடித்து சிறப்பான தொடக்கத்தை சென்னை அணிக்கு கொடுத்திருக்கிறார். கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக 52 பந்துகளில் 92 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடதக்கது.