வீடியோ : “என்னங்க இது” தோனியின் பைக் சேகரிப்பை பார்த்து அசந்தது போன வெங்கடேஷ் பிரசாத்.

எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. அதற்கு தனியாகவே தோனி தன்னுடைய ராஞ்சி பண்ணை இல்லத்திற்குள் கட்டப்பட்ட ஒரு தனி இரண்டு மாடி ஷோரூம் போன்ற கேரேஜ் உள்ளது. அங்கு அவர் தனது முழு பைக்குகளையும் காட்சிக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் த

By ·

எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. அதற்கு தனியாகவே தோனி தன்னுடைய ராஞ்சி பண்ணை இல்லத்திற்குள் கட்டப்பட்ட ஒரு தனி இரண்டு மாடி ஷோரூம் போன்ற கேரேஜ் உள்ளது. அங்கு அவர் தனது முழு பைக்குகளையும் காட்சிக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் தான் முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் வென்கேத் பிரசாத் ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டிற்கு பைக்குகளைப் பார்க்க சென்றார்.

அதோடு ஒரு வீடியோ பதிவையும் வெங்கடேஷ் பிரசாத் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த்திருந்தார். அதில் “ஒரு நபரிரிடம் நான் பார்த்த வினோதமான ஆர்வத்தில் இதுவும் ஓன்று ஒன்று. என்ன ஒரு தொகுப்பு, என்ன ஒரு அற்புதமான மனிதர் எம் ,எஸ் தோனி . ஒரு சிறந்த சாதனையாளர் மட்டுமல்ல யாராலும் நம்பமுடியாத நபர். அவரது ராஞ்சி வீட்டில் அவரது பைக்குகள் மற்றும் கார்களின் தொகுப்பின் ஒரு பற்வை தான். எனக்கு தோனியின் வினோதமான ஆர்வம் என்னை தூக்கி எரிகிறது.

இது நம்பமுடியாத இரு ஈடுபாடு. இந்த இடம் அசாதாரணமாக இருக்கிறது. யாராவது இதைப் பற்றி பைத்தியம் பிடிக்கும் வரை … உங்களால் நம்ம முடியாது முடியாது… இது ஒரு பைக் ஷோரூம். இதுபோன்ற ஏதாவது செய்ய அல்லது செய்ய உங்களுக்கு நிறைய ஆர்வம் இருக்க வேண்டும், அல்லது யாராவது பைத்தியமாக இருக்க வேண்டும். இதைப் பற்றி நீங்கள் பைத்தியம் பிடிக்க வேண்டும் என்றார் வெங்கடேஷ் பிரசாத்.

மேலும் வீடியோவில் தோனியின் மனைவி ஏன் இவ்வளவு பைக் சேகரிப்பு என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சி.எஸ்.கே கேப்டன் தோனி பதிலளித்தார் “நீங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டதால், நான் சொந்தமாக ஏதாவது வைத்திருக்க வேண்டியிருந்தது, எனவே நீங்கள் அனுமதித்த ஒரே விஷயம் இதுதான். மேலும் நீங்கள் இந்த இடத்தை பூப்பந்து விளையாட்டு அரங்கத்திற்க்கு பின்னல் வைக்காலம் என்று கூறினீர்கள். ஆனால் நான் அதற்கு முன்னாள் இருக்க வேண்டும் என்றேன் என தோனி அந்த வீடியோவில் பதிலளித்திருந்தார்.

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி. பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று கொடுத்தார்.

இதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியிலும் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்றது கொடுத்தார். மேலும் 42 வயதாகும் தோனி இந்த ஐபிஎல் சீசனோடு விடைபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் என்னுடைய ரசிகர்களுக்காக நான் அடித்த ஆண்டும் விளையாட முயற்சி செய்வேன் என்று கூறினார். இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை