திடீரென சென்னைக்கு வருகை தந்த தோனி. என்ன காரணம் தெரியுமா? முழு விவரம் இதோ.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி .இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி

By ·

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி .இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி இந்தியாவிற்கு உலகக்கோப்பைகளை பெற்று தந்ததுமில்லாமல் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து இருக்கிறார்.

மேலும், இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஐபில் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறை கோப்பையை தட்டி சென்றது அதோடு சில ஆண்டுக்கு முன் இவரின் வாழ்கை திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தோனி சினிமாவிற்கு எப்போ வருவார்? என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்:

இப்படி ஒரு நிலையில் தான் தோனி சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.இதன் மூலம் இவர் ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்திருந்தார். தற்போது தோனி அவர்கள் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் மொழியில் ஒரு படத்தை எடுத்து இருக்கிறார். அந்த படத்தை பல மொழிகளில் அவர் வெளியிட இருக்கிறாராம்.

அந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷியே எழுதி இருக்கிறார். அந்த கதையை தோனி 3d வடிவில் எடுக்க இருக்கிறாராம். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி தான் இயக்கி இருக்கிறார்.

எல்ஜிஎம் படம்:

இந்த படத்திற்கு Let’s Get Matried என தலைப்பு வைத்திருக்கின்றனர். சுருக்கமாக LGM என அழைக்கிறார்கள். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், இவானா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை தோனி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரைலர் வெளியீடு :

இந்நிலையில் LGM படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழாவிற்காக தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி என இருவரும் நேற்று சென்னை வந்தடைந்தனர். இதற்கு முன்னதாக சாக்‌ஷி கொடுத்த பேட்டியில் “நாங்கள் இதுபோன்ற அர்த்தமுள்ள கதைகளைச் செய்வதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த அற்புதமான பயணத்தை இன்று தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த படம் வேடிக்கை நிறைந்த படமாகவும் முழு குடும்பமும் ரசிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்றார் சாக்‌ஷி.

மேலும் இன்று இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு செய்வதாக கூறியுள்ள தோனி என்டர்டைமென்ட் மென்ட் நிறுவனத்தில் LGM படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனமானது வாங்கியுள்ளது.இதனிடையே தோனி மற்றும் சாக்‌ஷி சென்னைக்கு வரும் போது ரசிகர்கள் பலரும் அங்கு கூடி தோனி, தோனி என்று ஆராவாரம் செய்தனர். அந்த வீடியோ பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை