செல்ல பிராணிகளுடன் தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடிய தோனி – வீடியோ இதோ.
முன்னாள் இந்திய அணியின் கேப்டனான தோனி இந்தியாவிற்காக பல போட்டிகளில் சிறப்பாக வழிநடத்தி மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். என்னதான் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் ஒரு கோப்பையை அதுவும் உலக கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக விளையாடி
முன்னாள் இந்திய அணியின் கேப்டனான தோனி இந்தியாவிற்காக பல போட்டிகளில் சிறப்பாக வழிநடத்தி மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். என்னதான் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் ஒரு கோப்பையை அதுவும் உலக கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக விளையாடி வெல்வது என்பது ஒரு சிறந்த தலைவன் வழிநடித்தினால் மட்டுமே முடியும். இந்த விஷயம் தோனியிடம் இருப்பதினால் தான் தோனிக்கு அளவுகடந்த ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அதே போன்று ஒரு அழுத்தமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி பாகிஸ்தான் போன்ற அணிக்கு 2 பந்தில் ஒரு ரன் மட்டுமே தேவை என்ற அழுத்தமான சூழ்நிலை இருந்தாலும் சரி அதனை அமைதியாக கையாண்டு வெற்றியும் பெற்று தந்திருக்கிறார். இதனால் தோனிக்கு கேப்டன் கூல் என்ற பட்டபெயரும் உள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய தோனி 5 முறை கோப்பைகளையும் வென்று கொடுத்திருகிறார்.
இப்படி பல திறமைகள் கொண்ட கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடினர். இந்த பிறந்தநாளில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும், பல இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை கூறினார்கள். மேலும் வாழ்த்து கூறத்தவர்களின் மீது விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் எழுந்தன. இதனிடையே தான் தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில் உங்களுடைய அனைத்து வாழ்த்துகளுக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் என்னுடைய பிறந்தநாளில் என்ன செய்தேன் என்பது குறித்து சிறிய வீடியோ என்று தலைப்புடன் தோனி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பதிவில் தோனி தன்னுடைய நாய்களுடன் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடினார். அதோடு அந்த விடீயோவின் கீழே தோனியின் மனைவி சாக்ஷியும் கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பெருமளவு வைரலாகி வருகிறது.
தோனி இந்த 2023 ஐபிஎல் தொடர் முழுவதும் முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட வெளியேறவில்லை. தொடர்ந்து இறுதி போட்டிவரையில் ஆடிய தோனி கோப்பையை சென்னை அணிக்கு வென்று கொடுத்துவிட்டு தான் அடுத்த வருடமும் ஆடுவேன் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். மேலும் போட்டி முடிந்த கையேடு மூலங்களில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்ட தோனி தற்போது நலமாக இருப்பது ரசிங்கர்களுக்கு நிம்மதியளிக்கிறது.