“எப்பா தலையே சுத்திடுச்சு” தோனியின் மகள் பள்ளி கட்டணத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.
உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த ஒரு கேப்டன் என்றால் அது தோனிதான். ஏனென்றால் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன் ஷிப் டிராபி என மூன்று உலக கோப்பைகளையும் பெற்று தந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தோனி கண்ணிமைக்கும் நேரத்தி
உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த ஒரு கேப்டன் என்றால் அது தோனிதான். ஏனென்றால் இந்திய அணிக்காக டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன் ஷிப் டிராபி என மூன்று உலக கோப்பைகளையும் பெற்று தந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தோனி கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்புகளை அடிப்பதில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே. மேலும் பினிஷின் செய்வதிலயே இவருக்கு பினிஷர் என்ற ஒரு பட்ட பெயருக்கும் இருக்கிறது.
மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு கேப்டனாகிய தோனி அன்றுமுதல் இன்று வரையில் கேப்டனாக இருந்து வருகிறார். மேலும் ஐபிஎல் போட்டியில் நீண்டகாலம் கேப்டனாக இருந்தவர், இவர் மட்டும் தான். அதோடு தோனி சென்னை அணிக்காக 5 கோப்பைகளையம், 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றியிருக்கிறார். இப்படி பல சாதனைகளை படைத்த தோனி தன்னுடைய சொந்த மண்ணை மறக்காமல் இன்னமும் ரஞ்சியிலேயே வாழ்ந்து வருகிறார்.
தோனி திருமணம் :
இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ல் சாக்ஷியை திருமண செய்து கொண்டார். பின்னர் தோனிக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு பெண் குழந்தையானது பிறந்தது. ஆனால் அப்போது தோனி ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை தொடரில் விளையாடி கொண்டிருந்தார். அதன் போதுதான் குழந்தை பிறந்த நிலையில் நாட்டிற்காக விளையாடிவிட்டு பின்னர் தான் இந்தியாவுக்கு திரும்பினார்.
பிள்ளை :
மேலும் ஏன் பிறந்த குழந்தையை பார்க்க செலல்வில்லை என்ற கேள்விக்கு “எனக்கு நாட்டின் கடமை தான் முதலில் அடுத்துதான் மற்றவை என்று கூறினார்” இது அப்போது பிரபலமாகி இருந்தது. இதற்கு பிறகு தோனி ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போதெல்லாம் தன்னுடைய மகள் ஜிவாவை அழைத்து வருவார். செல்லபோனால் நம்பர் 1 தோனி ரசிகையே அவருடைய மகள் தான் என்று கூறலாம் அந்த அளவிற்கு தன்னுடைய அப்பாவிற்க்க ஆரவாரம் செய்தார் ஜிவா.
இந்நிலையில் தோனி இருக்கும் வசதிக்கு அவர் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் அவரது மகளை படிக்க வைக்க முடியும், அதற்கான பண பலமும், ஆள் பலமும் தோனியிடம் இருக்கிறது. ஆனால் தோனி தன்னுடை மகளை அவரது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள பள்ளியிலேயே சேர்த்தார். தற்போது அவர் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இப்படி பட்ட நிலையில் தான் தோனியின் மகள் படிக்கும் பள்ளியின் கட்டணம் குறித்து ஒரு தகவலானது தற்போது ஷோசியல் மீடியாவில் உலா வருகிறது.
அதாவது டாரியன் வேர்ல்ட் ஸ்கூல் என்ற பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்க சுமார் 2,75,000 ருபாய் கட்டணம் என்று அதன் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நமக்கு இந்த தொகை பெரிதாக தெரிந்தாலும் தோனிக்கு இந்த தொகை பெரியது கிடையாது. மேலும் ஜிவாவே ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் வைத்திருக்கிறார். அவரை 2.3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.