ரோல்ஸ் ராய்ஸ் காரை தன்னுடைய சொந்த ஊரில் ஓட்டிச்செல்லும் தோனி – அதிகமாக பகிரப்படும் வீடியோ இதோ.
எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தனக்கு பழைய கார்களின் மீதும் பிரியம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர
எம்.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தனக்கு பழைய கார்களின் மீதும் பிரியம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி.
பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று கொடுத்தார். இதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியிலும் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்றது கொடுத்தார்.
மேலும் 42 வயதாகும் தோனி இந்த ஐபிஎல் சீசனோடு விடைபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் என்னுடைய ரசிகர்களுக்காக நான் அடித்த ஆண்டும் விளையாட முயற்சி செய்வேன் என்று கூறினார். இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது குறிப்பிடதக்கது. ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது பட்டத்தை வென்று சாதனை படைத்ததை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி களத்திற்கு வெளியே தனது நேரத்தை செலவழித்து வருகிறார்.
இரண்டு மாத கால சீசனுக்குப் பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அன்றிலிருந்து தனது குடும்பத்துடன் சில தரமான நேரத்தைச் செலவழிக்கிறார். சமீபத்தில் கூட தன்னுடைய கைக்குகளில் கலெக்சன்களை தன்னுடைய நண்பர்களுக்கு காட்டிய வீடியோ பெருமளவு வைரலானது. அப்படிபட்ட நிலையில் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் 1980 காரை ஓட்டிக் கொண்டிருந்த ஒரு வீடியோ சோசியல் மீடியவில் தற்போது வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ :
அந்த வீடியோ பதிவில் 42 வயதான அவர் நீல நிற ரோல்ஸ் ராய்ஸை சாலையில் ஓட்டிச் செல்வதைக் காண முடியும். பைக்கில் வந்த ஒரு ரசிகர், அவருடன் தொடர்ந்து பயணம் செய்து அவரைப் பதிவு செய்துள்ளார். அவருடன் காரில் மேலும் இருவர் இருந்தனர். குறிப்பிடத்தக்க வகையில் தோனிக்கு பைக்குகள் மீது தனி விருப்பம் உள்ளது. ஆனால் அந்த வீடியோவைப் பார்க்கும்போது முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு விண்டேஜ் கார்கள் மீதும் பிரியம் இருபது தெரிகிறது.
இந்நிலையில் தோனியின் பைக்குகள் மீதான பிரியம் என்பது அளவு கடந்தது, அதற்காக தன்னுடைய பண்ணை வீட்டில் ஒரு பெரிய இடத்தையே ஒதுக்கியுள்ளார் தோனி. அதுமட்டுமல்லாமல் தோனியை CSK அணிக்கு வர முக்கியமான காரணமாக இருந்த விபி சந்திரசேகர் கூட தோனிக்கு பைக்குகள் மீது கொள்ள பிரியம் என்றும், CSK நிர்வாகம் 2008ஆம் ஆண்டு தொனிக்கு பைக்கை கொடுத்த பின்னர் அதை எடுத்து சென்று சென்னை நகரரை சுற்றுப்பார்த்து வந்தார் என்று கூறியது குறிப்பிடதக்கது.