கேப்டன்சி பதவியை துறந்த தல தோனி…. புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ். சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா நாளை தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி என்ன வென
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா நாளை தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி என்ன வென்றால் சென்னை அணியின் கேப்டனாக தோனி தாமாக விலகி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அந்த பதவியை அவர் வழங்கி விட்டார்.
IPL வரலாற்றில் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான். தற்போது உள்ள பல வீரர்களும் தோனியின் கேப்டன்சியில் கீழ் விளையாட வேண்டும் என்று ஆசை படுவார்கள். ஆனால் இனி அது நடைபெற வாய்ப்பே கிடையாது. பல கோப்பைகளை வென்ற வீரர்கள் கூட தோனியின் கேப்டன்சியை பார்த்து கற்ற்கொள்ளவேண்டும் என்றும் கூறுவார்கள். அவர் ஐபிஎல் மட்டும் அல்லாமல் சர்வதேச போட்டிகளிலும் அவர் அனைத்து வகையான கோப்பைகளையும் அவர் பெற்றுள்ளார்.
ஐபிஎல் பொறுத்தவரை இது நடைபெற்ற சீசன்களில் இரண்டு முறை தவிர்த்து பெரும்பாலான சீசன்களில் சென்னை அணியை பிளே ஆப்பிற்கு கொண்டு சென்றுள்ளார். அதில் ஐந்து முறை கோப்பையையும் 5 முறை இரண்டாவது இடத்தையும் தக்கவைத்து கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் CLT கோப்பையையையும் இரண்டு முறை பெற்று கேப்டன்சியில் தனது திறமையை நிருப்பித்துள்ளர். அவர் கேப்டன்சியில் எப்போதும் கூலாக இருப்பதால் அனைவரும் அவரை கேப்டன் கூல் என்றும் அழைப்பார்கள்.
இந்த வருடம் ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமான செய்தி என்னவென்றால் இது வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தோனி ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூவரில் ஒருவர் ஒரு அணிக்கு கேப்டன்சியில் இருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த மூன்று வீரர்களும் இந்த தொடரில் வெறும் வீரர்களாக மட்டுமே விளையாட உள்ளனர். தோனி தனது கேப்டன்சி பதவியை சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன்சியில் அமர்த்தியுள்ளார்.
MS Dhoni's final match as the captain. 💔
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 21, 2024
– MSD the skipper will be missed. pic.twitter.com/P84nxpwji2
தற்போது ஐபிஎல் போட்டியில் அதிக போட்டிகளை விளையாடடிய கேப்டன் என்றால்அது கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தான். அவர் கேப்டனாக 52 போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி கடைசி ஐபிஎல் போட்டியில் கோப்பை வென்று வெற்றி கேப்டனாக தந்து கேப்டன்சி பதவியை துறந்துள்ளார். அவர் கடந்த வருடமே காலில் காயத்துடன் தான் பேட்டிங் செய்து வந்தார். தோனி தற்போது கேப்டன்சியில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு எமற்றதைய அளித்துள்ளது.