தோனி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் – ரஹானே.
நேற்று நடந்த முதல் சென்னை vs மும்பை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் தூவக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு காலகாலமாக இருந்து வரம் பிரச்சனை மீண்டும் ஏற்பட்டது. தொடக்கம் முதல் 3 பௌண்டர
நேற்று நடந்த முதல் சென்னை vs மும்பை போட்டியில் முதலில் டாஸ் வெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு செய்தது. இந்நிலையில் தூவக்கம் எப்போதும் போல மும்பை இத்தியன்ஸ் அணிக்கு நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு காலகாலமாக இருந்து வரம் பிரச்சனை மீண்டும் ஏற்பட்டது. தொடக்கம் முதல் 3 பௌண்டரிகள் 1 சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மாவை தேஷ்பாண்டே ஆட்டமிழக்க செய்தார்.
அதில் இருந்துதான் மும்பை அணிக்கு விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. பின்னர் 6.4 ஓவரில் இஷான் கிஷான் ஜடேஜாவின் பந்துல ஆட்டமிழக்க பின்னர் தொடர்ந்து வந்த மும்பை அணியின் பேட்ஸ்மேன்ஸ்கள் அதிர்ச்சி கொடுத்து வெளியேற. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இஷான் கிஷன் 32 ரன்கள் எடுத்தார். அதுவே மும்பை அணியின் அதிகபட்ச ரன் ஆகும்.
இந்நிலையில் 157 ரன்கள் என்ற இலக்கை துரத்த வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது .0 ரன்கள் எடுத்த நிலையில் துவக்க பேட்ஸ்மேன் பேரன்தோர்ஃப் 0.4 ஓவர்களில் வெளியேறினார். அது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு பிறகு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் செல்ல குட்டி ரஹானே அசாத்தியமான இன்னிங்கை ஆடினார்.
அந்த சம்பவம் 3வது ஓவர்களில் போது நடந்தது. அஸ்ரத் கான் பந்துவீசிய அந்த ஓவரில் முதல் பந்தை 6 அடித்தார். அதற்கு பிறகு வந்த பந்துகளை பவுண்ட்டிரிகளுக்கு அனுப்பிய ரஹானே ஒரே ஓவரில் 27 ரன்கள் எடுத்தார். இந்த வருட ஐபிஎல் சீசனில் அதிகபட்சமான ரன் இதுதான். 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியடைய உறுதுணையாக இருந்தார். ஆனால் அதற்கு பிறகு ஜேசன் பால் பேரன்தோர்ஃப் ரஹானே ஆட்டமிழந்தாலும் தான் செய்ய வந்த விஷயத்தை சரியாக செய்து விட்டு சென்றார்.
— Ninja (@IPLcskMSD) April 8, 2023
அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதற்கு பிறகு களமிறங்கிய களமிறங்கிய ருதுராஜ் பொறுமையாக விளையாடி சென்னை அணிக்கு ரன் குவித்தார். பின்னர் 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட் வீழ்ந்தது.இந்நிலையில் கடைசியாக களமிறங்கிய அம்பத்தி ராயுடு அற்புதமாக விளையாடி சென்னை அணியை வெற்றிபெறச் செத்தார். இதன் மூலம் சென்னை அணி தன்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ரஹானே பேசுகையில் “டாஸ் போடும் போது நான் இந்த ஆட்டத்தில் விளையாட போகிறேன் என்று தெரிந்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக, மொயீன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் நான் சில நல்ல பார்மில் இருந்தேன். வலைகளில் பலமணிநேரம் பேட்டிங் செய்தேன். அதோடு நான் நல்ல ஷாட்டுகளை எடுக்க முயற்சி செய்தேன். அதில் தொய்வு ஏற்பட நான் விரும்பவில்லை. இது உங்களுடைய விளையாட்டை தக்க வைத்து கொள்வதில் இருக்கிறது.
— Ninja (@IPLcskMSD) April 9, 2023
நீங்கள் மனதளவில் நன்ங்கு தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால ஐபிஎல் எனது ஒரு பெரிய நீண்ட நாட்கள் நடக்கும் போட்டி எனவே அந்த போட்டியில் உங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் வீரர்களை அவர்களது போக்கில் விளையாட விடுவார்கள். என்னிடம் என்னுடைய பலத்தில் கவனம் செலுத்து சொன்னார்கள். வான்கடே மைதானத்தில் விளையாடுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானம் எனக்கு நன்றாக தெரியும். இதுவரை இங்கு நான் டெஸ்ட் மட்டும் விளையாடவில்லை என்றார் ரஹானே.