விக்கெட் கீப்பிங்கில் ராஜா என நிருபித்த தல தோனி. இது வரை விக்கெட் கீப்பிங்கில் யாரும் செய்த சாதனை உடைத்த தல தோனி. அது என்ன சாதனை தெரியுமா??
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2021 மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டின
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2021 மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம் மைதானத்தில் பலபரீட்சை செய்து வருகிறது. டெல்லி அணி இதற்கு முன்பு இரண்டு தோல்விகளிலும் சென்னை அணி இதற்க்கு முன்பு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இன்றைய போட்டியில் மோதியது.
இதில் டெல்லியில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களது ஐபிஎல் 2024 முதல் வெற்றியை பதிவு செய்ய முடியும். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்வதை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்தது 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து 191 ரன்களை குவித்து இருந்தது. டெல்லி அணி இவ்வளவு பெரிய இலக்கை குவிக்க முக்கிய காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா தான்.
இவர்களின் சிறப்பான தொடக்க ஆட்டத்தால் ஆட்டத்தாலும் அதன் பின்பு அந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்தாலும் டெல்லி அணி அவ்ளோ பெரிய இலக்கை குவித்தது இதில் டெல்லி அணியின் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்களும் பிரித்வி ஷா 43 ரன்கள் அடித்திருந்தனர். அதன் பின்பு வந்து ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டிய 32 பந்துகளில் 51 ரன்கள் குறித்து இருந்தார். அதில் நான்கு பவுண்டர்களும் மூன்று சிக்சர்களும் அவர் அடித்து இருந்தார்.
சென்னை அணியின் ஆதிக்கம் ஒரு சில ஓவர்களில் மட்டுமே இருந்தது அதன் பின்பு டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஆதிக்கம் தான் இந்த போட்டியில் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். இதில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களான பத்திரனா மூன்று விக்கட்டுகளையும் ஜடேஜா மற்றும் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தனர் எனவே குவித்தது டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து 191 ரன்களை குவித்து இருந்தது.
இந்த போட்டியில் தோனியும் தனது சிறப்பான விக்கெட் கீப்பிங்கை அவர் வெளிப்படுத்தி இருப்பார். ஜடேஜா வீசிய பந்தில் பிருத்வி ஷாவின் கேட்சை சிறப்பாக பிடித்து இருப்பார். அதன் மூலம் T20 கிரிக்கெட்டில் 300 ஆட்டமிழப்புகளை செய்த வீரர் என்ற சாதனையும் தோனி படைத்து இருப்பார். சென்னை அணி தற்போது 3 விக்கெட்டை இழந்து 75 ரன்களில் விளையாடி வருகிறது.