இன்று சென்னை சூப்பர் அணி கேப்டன் தோணி விளையாடுவாரா இல்லலையா ? விளக்கும் கொடுத்த சிஎஸ்கே அணி CEO!
சென்னை அணியின் கேப்டனாக இருப்பவர் மகேந்திர சிங் தோனி .இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதிலிருந்து இவருக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்து வருகின்றன்னர் .இவர் அனைத்து பார்மெட்களிலும் அனைத்து கோப்பைகளையும் வென்று ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தில் உள்ளார்.இவர் இந்திய அணியில் இருந்து
சென்னை அணியின் கேப்டனாக இருப்பவர் மகேந்திர சிங் தோனி .இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போதிலிருந்து இவருக்கு அதிக அளவு ரசிகர்கள் இருந்து வருகின்றன்னர் .இவர் அனைத்து பார்மெட்களிலும் அனைத்து கோப்பைகளையும் வென்று ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தில் உள்ளார்.இவர் இந்திய அணியில் இருந்து வெளியேறிய பிறகு கூட இவருக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு .இவர் ஸ்மார்ட் போன் வைத்து கொண்டு இருந்தாலும் இவர் அதிக அளவு அதனை பயன்படுத்த மாட்டார்.அவர் இன்ஸ்டகிராம் மற்றும் ட்விட்டர் இணையதளத்தில் கணக்குகள் வைத்து இருந்தாலும் அவரின் தரிசனம் அதில் கிடைப்பது மிகவும் அரிதானது . ஆகையால் அவரின் தரிசனத்துக்கு ரசிகர்கள் ஆவலுடன் மைதானத்தில் காத்துகொண்டு இருக்கின்றன
விராட் கோலிக்கு ஆறுதல்
தோனி கிரிக்கெட் விளையாடும் போது அவருடைய டிரெஸ்ஸிங் ரூம் எப்பொதும் திறந்து இருக்கும் என நிறைய வீரர்கள் கூறுவதை நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். அவரை மொபைல் போன்களில் பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று .அவர் இளையதலை முறை வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு அளிப்பார் .விராட் கோலி தொடர்ந்து சரியாக விளையாடாத நேரத்தில் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு அறுதல் கூறினார் என விராட் கோலி கூட கூறி இருக்கிறார் .ஆகையால் சென்னை அணி ரசிகர் மட்டுமின்றி அனைத்து இந்திய ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார் எம் எஸ் தோனி.
தோனிக்கு காயம்
இன்று இரவு தொடங்க இருக்கும் ஐபிஎல் திருவிழாவின் முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது .அதில் சென்னை அணி குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது .இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் எம் எஸ் தோனி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் எனவும் , அவருக்கு பதில் ருதுராஜ் அல்லது ஜடேஜா கேப்டனாக இருப்பார் இணையதளத்தில் செய்திகள் நேற்று மாலை முதல் குவிந்த வண்ணமே இருந்தது இதனால் பலரும் தோனி இன்றைய குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டாரா என வருத்தத்துடன் கூறி வந்து கொண்டிருந்தனர்.
தோனி விளையாடுது உறுதி
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டு இருக்கிறார். ஆம் அகமதாபாத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது தோனியின் இடது காலில் முட்டியில் காயம் ஏற்ப்பட்டது உண்மைதான். அதற்காக தோனி இன்று நடக்கவிருக்கும் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுவது உண்மை அல்ல கண்டிப்பாக இன்று குஜராத்துக்கு எதிராக நடக்கவிருக்கும் போட்டியில் தோனி பங்கேற்பதென சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதியாக கூறியுள்ளார்.