IPL வரலாற்றிலேயே கடைசி ஓவர்களில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்த தோனி.

ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 36

By ·

ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 36 பந்துகளில் 52 ரன்களை அடித்த நிலையில் மொயின் அலியிடம் விக்கெட்டை இழந்தார்.அதன் பின் ஹெட்மயர் 18 பந்துகளிலே  30 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.   

176 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்தார். அதன் தொடர்ச்சியாகவே 8 ரன்களில் சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய ரஹானே சிறப்பாக ஆடி 19 பந்துகளிலே 31 ரன்களை அடித்த நிலையில் அஷ்வின்னிடம் ஆட்டமிழந்தார். டுபே மற்றும் மொயின் அலி சொற்ப ரன்களிலே அவுட் வெளியேறினார். அதன் பின் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ராயுடு 1 ரன்னை மட்டுமே எடுத்து சஹலிடம் விக்கெட்டை இழந்தார்.சென்னை அணிக்கு மேலும் மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் நிதனமாக ஆடிய கான்வே 37 பந்துகளில் 50 ரன்களை அடித்தார்.இந்த நிலையில் அவரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அரை சதம் அடித்த அடுத்த பந்திலே விக்கெட்டை சஹலிடம் இழந்தார்.கேப்டனாக 200 வது போட்டியில் பேட்டிங்கில் களமிறங்கிய தல தோனி 17 பந்துகளில் 32 ரன்களை அடித்தார்.

கடைசி ஓவரில் 21 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனி அந்த ஓவரில் 2 சிச்சர்கள் உட்பட ஒரு சில ரன்களை மட்டுமே எடுதார்.கடைசி பந்தில் 5 ரன்களை எடுத்தல் வெற்றி என்ற நிலையில் சந்திப் சர்மா அந்த பந்தில் 1 ரன்களை மட்டுமே கொடுத்தார். அதனால் சென்னை அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தது.தோனி கேப்டனாக 200 வது போட்டியில் தோல்வியடைந்தது சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சாதனை படைத்த தோனி

இந்நிலையில் தான் வரலாற்று சாதனையை படைத்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. இப்போட்டியில் 15 வது ஓவரில் களமிறங்கிய தோனி 3 சிக்சர்களையும் 1 பவுன்றியையும் விளாசி 32 ரன்களை குவித்தார்.

ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவர்களில் அதிக ரன்களை குவித்து சாதனை படைத்தார். கடைசி ஓவர்களில் 282 பந்துகளை எதிர்கொண்டு 693 ரன்களை குவித்துள்ளார். கடைசி ஓவர்களில் அவரது ஸ்டரைக் ரேட் 245.74 அதுமட்டும் இல்லாமல் 57 சிக்ஸ்சர்களையும், 49 பவுண்டரிகளையும் அடித்து குவித்துள்ளார். கடைசி ஓவர்களில் அதிக ரன்களை குவித்த வரிசையில் போலார்ட் இரண்டாம் இடத்திலும் ,ஜடேஜா மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை