வந்தோம் 2 மாதம் விளையாடினோம் என்பது போல சென்னை அணி எனக்கு கிடையாது – உருக்கமாக பேசிய தோனி.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் சென்னணி அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்ற கேள்வ

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் சென்னணி அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருந்த போதிலும் அதற்கு தோனி இன்னமும் சில மாதங்கள் கழித்து பதில் கூறுவார் என்று சென்னை அணியின் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தான் தோனி துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது தொடர்பு ஒரு உணர்வுபூர்வமான இணைப்பு. இது ஒரு வீரர் அணிக்காக இரண்டு மாதங்கள் விளையாடி விட்டு வீட்டிற்குத் திரும்புவது போல் இல்லை. உணர்வுபூர்வமான இணைப்புதான் எனது பலம் என்றார் தோனி .

நான் டிவிட்டரை விட இன்ஸ்டாகிராமை விரும்புகிறேன். டிவிட்டரினால் நல்லது எதுவும் நடக்கவில்லை என்று நான் நம்புகிறேன். குறிப்பாக ஒரு சர்ச்சை, யாராவது எதையாவது எழுதி அதை சர்ச்சையாக மாற்றுவார்கள். அங்கு 140 எழுத்துக்களை எழுத முடியும். உதாரணமாக அங்கு எதையாவது செல்கிறார்கள் என்றார் அதை அவர்கள் எதை அர்த்தப்படுத்த விரும்புகிறாரோ அதை விளக்குவதும் மக்களுக்கு விடப்பட்டுவிடும்.

அதனால் தான் நான் ட்விட்டர் எனக்கானது இலலை என்று தோன்றியது. இன்ஸ்டாகிராம் எனக்கு இன்னும் பிடிக்கும் ஏனென்றால் என்னால் ஒரு படத்தையோ அல்லது ஒரு வீடியோவையோ போட்டு அப்படியே விட்டுவிடலாம். அதுவும் இப்போது மாறி வருகிறது. நான் இன்னும் இன்ஸ்டாகிராமை விரும்புகிறேன். நான் எங்கேயாவது நன்றாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்த ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறேன் என்றார் தோனி.

மேலும் பேசிய தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்தும் பேசினார். அவர் கூறுகையில் : கடினமான விஷயம் என்னவென்றால், நான் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடவில்லை, ஆனால் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். எனவே நீங்கள் வந்தவுடன், நீங்கள் மிகவும் உடற்தகுதியுடன் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் இளைஞர்களுடன் போட்டியிடுகிறீர்கள்.

தொழில்முறை விளையாட்டு மிகவும் எளிதானது கிடையாது. நீங்கள் அவர்களின் அளவில் விளையாட வேண்டும் என்றால், நீங்கள் வயதுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் நான் சமூக ஊடகங்களில் இல்லை, அதனால் கவனச்சிதறல் குறைவாக உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை