இந்த ஒரு காரணத்திற்க்காகவே தோனி மேலும் ஒரு ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவார் – தோனியின் நெருங்கிய நண்பர் பேச்சு
IPL2024 ஆம் ஆண்டுக்கான போட்டியானது மார்ச் 22ம் தேதி அன்று சென்னையில் பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு எதிராக முதல் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் க்கு முன்னதாக அனைத்து முக்கிய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் பயிற்சி செய்
IPL2024 ஆம் ஆண்டுக்கான போட்டியானது மார்ச் 22ம் தேதி அன்று சென்னையில் பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு எதிராக முதல் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் க்கு முன்னதாக அனைத்து முக்கிய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் பயிற்சி செய்வது போலும் பேட்டிங் பயிற்சி செய்வது போலும் வீடியோக்களைஇணையத்தில் பரவி வருகிறது ஐபிஎல் ஆதிக்கும் செலுத்தும் அணி என்றால் அதில் சென்னை அணியும் ஒன்றுதான்.
ஐபிஎல் பொறுத்தவரை அதிக அளவில் கோப்பைகளை வென்ற அணி என்று பார்த்தால் அது சென்னை அணி மற்றும் மும்பை அணி தான். இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் பெங்களூரு அணி இது வரை ஒரு கோப்பையை கூட வெல்ல வில்லை. இந்த இரண்டு அணிகளுக்கும் இருக்கும் ரசிகர்கள் பலத்திற்கு பெங்களூரு அணிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் பலம் உள்ளது.
சென்னை அணியின் கேப்டனாக நீண்ட ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அதே போல் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா பதவிஏற்பதற்கு முன்பு வரை மும்பை அணி ஒரு கோப்பையை கூட வெல்ல வில்லை. அவர் கேப்டனாக பதவி ஏற்ற பின் அவர் மும்பை அணிக்கு 5 கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார்.ஆனால் சில தினங்களுக்கு முன்பு மும்பை அணி அவரை கேப்டன் பதவியில் இருந்து விளக்கியது.
சென்னை அணியின் கேப்டனாக தோனி தான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வருகிறார் ஆனால் இடையில் ஒரு வருடத்தில் சில போட்டிகளில் மட்டும் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக பதவியேற்று இருந்தார் ஆனால் அவரால் அந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை. ஐபிஎல் தொடக்கத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னை அணி கோப்பை கைப்பற்றியது அதன் பின் 2011 2018 2021 2023 5 முறை சேம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல் இல் பலமான அணி திகழ்ந்து வருகிறது அதுமட்டுமல்லாமல் 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த சாம்பியன் ஷிப் போட்டிகளில் கோப்பையை சென்னை அணி வென்று உள்ளது.
இது குறித்து தோனியின் நெருங்கிய நண்பர் பரம்ஜித் சிங் கூறுகையில், இப்பொழுது நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 தோனியின் கடைசி போட்டி என்று பலரும் கூறி வருகின்றனர் ஆனால் இது குறித்து அவரது நெருங்கிய நண்பர் சில தகவல்களை தற்போது கூறியுள்ளார் இந்த ஐபிஎல் 2024க்குப் பிறகு எம்எஸ் தோனி இன்னும் ஒரு சீசனில் விளையாடுவார். அவர் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார், மேலும் ஒரு ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கூறினார்.