“சென்னை ரசிகர்கள் அவர்கள் போல் இல்லை.” நேற்றைய போட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் கூறிய ரசிகர்கள். இணையத்தில் பரவும் தோனியின் பழைய வீடியோ.

அகமதாபாத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி தோனி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று

By ·

அகமதாபாத்தில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி தோனி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். இந்நிலையில் தோனி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தோனி பேசியது:

அந்த வீடியோவில் தோனிக் கூறியது என்னவென்றால் எனக்கு 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பாகவே நான் சேப்பாக்கம் மைதானத்தில் தான் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டேன். ஐபிஎல் போட்டி நேரத்தின் போது சென்னை அணியால் வாங்கப்படுவேன் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. அதுதான் தமிழ்நாடு மற்றும் சென்னை கலாச்சாரம் பெற்று புரிந்து கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. ஏனென்றால் நான் பிறந்த மண்ணில் இருக்கும் கலாச்சாரம் வேறு மாதிரி இருக்கும் ஆனால் எனது பெற்றோர் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதன் பின் உத்தரகாண்ட் என்று மாறியது நான் ராஞ்சியில் தான் பிறந்தேன்.

அது முதலில் பீகாருடன் இருந்தது பபின்னர் ஜார்கண்ட் மாநிலத்தில் இணைந்து மாநிலத்துடன் பிரிக்கப்பட்டது. அதன் பின் 18 வயதில் நான் மேற்கு வங்காளத்தை உள்ள கரக்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தேன் அதன் பின்பு தான் நான் சென்னை வந்தேன் நான் எப்படி இருக்க வேண்டும் எப்படி விளையாட வேண்டும் எப்படி பாராட்ட வேண்டும் என்பதை அனைத்தும் சென்னை எனக்கு நிறைய கற்றுக் கொடுத்த.து சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி போட்டிகளின் போது ரசிகர்கள் மிகச் சிறந்த ஆதரவு எனக்கு கொடுத்தார்கள் அதேபோல் எதிரி அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நினைக்க மாட்டார்கள் ஆனால் சென்னை மக்கள் அப்படி அல்ல கிரிக்கெட் விளையாட்டை புரிந்து கொண்டு பாராட்டக்கூடிய ரசிகர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் தோனி பேசிய பழையபடி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை