“நான் அவருடன் பேசும் போதெல்லாம், அவரிடமிருந்து நான் எப்போதும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன்” – துருவ் ஜூரேல் பேச்சு.

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்பு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற

By ·

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்பு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற்றும் சிறப்பான பந்த்துவீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இருந்தது.

அதில் இந்திய அணிக்கு முக்கிய தூணாக இருந்தது ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கும் ஒரு காரணம் தான். அது மட்டுமல்லாமல் அதற்க்கு முக்கிய காரணமாக இருந்தது சர்ப்ராஸ் கானின் இரண்டு அரை சதமும் தான். சர்ப்ராஸ் கான்னுக்கு இது தான் இந்திய அணிக்கு அறிமுகப்போட்டி. அவர் பல காலமாக இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்று அவர் போராடி கொண்டு இருந்தார். அவருக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை அவர் வெளிப்படுத்தினார்.

இந்த இரண்டு இளம் வீரர்கள் மட்டுமல்லாமல் ஜூரேல்லும் விக்கெட் கீப்பர் ஆக தனது பயணத்தை இந்திய அணிக்காக தொடர்ந்தார். முதல் இன்னிங்க்சில் ஜூரேல் தனது சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 104 பந்துகளில் 46 ரன்களை அவர் அடித்து இருந்தார்.அதில் 2 பவுண்டரிகளும் 3 சிக்சர்களையும் அவர் அடித்து இருந்தார். அவர் எம் எஸ் தோனியுடன் ஆன பழக்கம் பற்றி சில கருத்துக்களையும் அவர் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன், நான் எழுந்து நின்று, என் எதிரில் நிற்கும் எம்எஸ் தோனியா என்று நினைக்க ஆரம்பித்தேன். அவருடனான எனது முதல் தொடர்பு ஐபிஎல் 2021 இல் இருந்தது, இது எனது முதல் சீசனாகும். அந்த நேரத்தில், இது கனவா இல்லையா என்று என்னை நானே கிள்ளிக் கொண்டிருந்தேன்.” “குறிப்பாக சர்வதேச விளையாட்டுக்குப் பிறகு மஹி பாயை சந்திக்க வேண்டும் என்பது எனது கனவு. நான் அவருடன் பேசும் போதெல்லாம், அவரிடமிருந்து நான் எப்போதும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன், எனவே ராஞ்சியில் நான்காவது டெஸ்டில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை