ஆஸ்திரேலிய வீரருக்கு இங்கிலாந்து சலூன் கடை கெடு விதித்ததா? – நடந்தது என்ன?

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அஸ்திரலியா இங்கிலாந்தை வீழ்த்தி 0 - 2என்ற முன்னிலையில் இருக்கிறது. இதனால் தங்களுடைய சொந்த மண்ணில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து விட

By ·

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அஸ்திரலியா இங்கிலாந்தை வீழ்த்தி 0 – 2என்ற முன்னிலையில் இருக்கிறது. இதனால் தங்களுடைய சொந்த மண்ணில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து விட கூடாது என்பதற்காக இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து போராடி வருகிறது.

இதனிடையே ஒரு தகவல் சோசியல் மீடியாவில் உலா வருகிறது. அதாவது ஆஸ்திரேலிய வீரரான அலெக்ஸ் கேரி லீட்ஸ் முடியை திருத்தம் செய்து கொள்ள, டேவிட் வார்னர், கவாஜா போன்ற தன்னுடைய அணியின் வீரர்களுடன் அந்த நகரில் உள்ள முடி திருத்தும் செய்யும் கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரம் கடை மூடும் சமயத்தில் முடிகளை திருத்தம் செய்து கொண்டு பணத்திற்கு பதிலாக கார்டை கொடுத்துள்ளாராம்.

ஆனால் அந்த கடையில் கார்ட் பாயிலாக பரிவார்த்தை செய்யப்படாது என்று கூறப்பட்டதினால் பின்னர் தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும், முடி திருத்தம் செய்த்த்ற்கான 30 யூரோவை இன்னமும் அலெக்ஸ் கேரி லீட்ஸ் கொடுக்காததால் அந்த கடையின் உரிமையாளர் பணத்தை திருப்பி தர கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சன் பத்திரிகை நிறுவனத்தில் பவெளியாகியுள்ள செய்தியில் “நான் காத்திருக்கிறேன். அவர்கள் கடை மூடுவதற்கு முன்பாக வந்தார்கள். அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் திருத்தம் செய்துவிட்டு கார்டு கொடுக்க நான் கார்டு ஏற்றுக்கொள்ளப்படாது என்றேன். ஆனால் அலெக்ஸ் கேரி லீட்ஸ் பணம் இல்லை என்று கூறினார். அவர் பக்கத்தில் இருக்கும் டெஸ்கோ இயந்திரத்தில் பணம் எடுத்த கொடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வாங்கி வழியாக அனுப்புவதாக கூறிவிட்டு சென்று விட்டார்.

ஸ்மித் மறுப்பு :

அந்த பணத்தை அவர் மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு அவர் அந்த பணத்தை வரும் திங்கள் கிழமைக்குள் கொடுக்கவில்லை என்றால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளாராம். இந்த செய்து அதிக சர்ச்சையானது என்பது சோசியல் மீடியாவில் தீயாக பரவியது. இதனையடைத்து வர்ணனையாளர்கள் கூட கலாய்க்கும் படியாக பேசினார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் ஆஸ்திரேலிய அணியின் வீரரான அலெக்ஸ் கேரி லீட்ஸ் வது போட்டியை முடித்துக்கொண்டு எங்கேயும் செல்லவில்லை என்றும் அதனை தான் உறுதி செய்வதாகவும் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் .

மேலும் இப்படிப்பட்ட பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் என்றும் செய்து ஊடகங்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நெட்டிசன்களின் கருத்துபடி இது ஜானி பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி லீட்ஸ் சர்ச்சையான முறையில் அவுட் செய்த போது ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை கலாய்க்கும் படியாக குழந்தை போன்று சித்தரித்து செய்தி வெளியிட்டனர். அப்படியொரு நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் படியாகத்தான் இப்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை