தமிழ் படத்தில் தோனி நடித்திருக்கிறாரா? எப்போது ரிலீஸ் தெரியுமா?
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி . இருக்கிறார். அதோடு சில ஆண்டுக்கு முன் இவரின்
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி . இருக்கிறார். அதோடு சில ஆண்டுக்கு முன் இவரின் வாழ்கை திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து தோனி சினிமாவிற்கு எப்போ வருவார்? என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.
இப்படி ஒரு நிலையில் தான் தோனி சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் இவர் ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மற்றும் பட்ஜெட் படங்களை தயாரித்திருந்தார். தற்போது தோனி அவர்கள் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் மொழியில் ஒரு படத்தை எடுத்து இருக்கிறார்.
அந்த படத்தை பல மொழிகளில் அவர் வெளியிட இருக்கிறாராம். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு Let’s Get Matried என தலைப்பு வைத்திருக்கின்றனர். சுருக்கமாக LGM என அழைக்கிறார்கள். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், இவானா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா நடித்திருக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. மேலும், இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தோனியும் அவருடைய மனைவி சாக்ஷியும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும் இந்த படமானது வரும் 27ஆம் தேதி திரையரங்குகில் வெளியாகும் என்ற இந்நிலையில் ட்ரைலர் வெளியாகி பெரும் ஆதரவை பெற்றிருந்தது.
வெளியான தகவல் :
இப்படிப்பட்ட நிலையில் தான் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக ஒரு தகவல் சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது. அதாவது இந்த LGM படத்தில் மஹேந்திர சிங் தோனி ஒரு சிறிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறாராம். ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னமும் வெளியாகாத நிலையில் படம் வெளியாகிய பிறகே இது பற்றி தெரியவவ்ரும். இருந்த போதிலும் தோனி படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படடுத்தியுள்ளது LGM.
தோனி இசைவெளியிட்டு விழாவில் கூறியது :
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய தோனி கூறுகையில் ” என்னுடைய டெஸ்ட் அறிமுகமே இங்கு சென்னையில் தான் நடந்தது. என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை நான் சென்னையில் தான் செய்தேன். என்னுடைய வாழ்வின் பல நல்ல விஷயங்கள் சென்னையில் தான் நடந்திருக்கிறது. எங்களுடைய முதல் தயாரிப்பாக எல்ஜிஎம் படத்தை எடுத்திருக்கிறோம். எல்ஜிஎம் படம் குழந்தைகளுடன் சென்று பார்க்க கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று பல விஷியங்களை கூறி இருந்தது குறிப்பிடதக்கது.