விராட் கோலியின் சதத்திற்க்கு உதவி செய்தாரா நடுவர்?. உண்மையில் இது தான் அங்கு நடந்ததா ?

விராட் கோலிக்கு ஆதரவாக செயல் பட்ட நடுவர்- விமர்சிக்கும் நெட்டிசன்கள். உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது கு

By ·

விராட் கோலிக்கு ஆதரவாக செயல் பட்ட நடுவர்- விமர்சிக்கும் நெட்டிசன்கள். உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது நேற்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால் முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.

இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பங்களாதேஷ் அதிகபட்சமாக ரிட்டன் தாஸ் 66 ரன்களும், ஹாசன் 51 ரன்களும், மஹ்மத்துல்லா 46 ரன்களும் எடுத்தனர் இறுதியில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா, சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும் தாகூர்,குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழித்தனர்.

இந்த ஸ்கோர் இந்தியா அணிக்கு சற்று சவாலான ஸ்கோராக தான் இருக்கின்றது.257 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை கொடுத்து 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை குவித்துள்ளது. இறுதியில் இந்திய விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் அதிக பட்சமாக கோலி 103 ரன்களும்,கில் 53 ரன்களும், ரோஹித் ஷர்மா 48 ரன்களும் குவித்தனர்.

ஆரம்பத்தில் இருந்து பங்களாதேஷ் அணி விக்கெட்டுகளை எடுக்க தடுமாறியே வந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் ஹசன் மஹ்மூத் 1 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.இந்திய அணி தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில் விராட் கோலியின் சதத்திற்காக அம்பையர் வீதி மீறலில் ஈடுபட்டுள்ளார் என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

விராட் கோலி சதத்திர்ற்கு தடுமாறி இருந்த நிலையில் 80 ரன்கள் இருந்தும் நிலையில் அவருக்கு சதத்தை பூர்த்தி செய்ய 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விராட் கோலி 97 ரன்கள் எடுத்திருந்த போது சதத்திற்கு ஒரு சிக்ஸர் அடித்தால் சதத்தை பூர்த்தி செய்து கொண்டிருப்பார். ஆனால் விராட் கோலி சதத்தை நெருங்க நெருங்க இந்திய அணியும் வெற்றி பக்கத்தில் நின்றது. இந்திய அணி வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்ட போது பங்களாதேஷ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் நசும் அகமத் பந்தை ஒய்டாக போட்டார். ஆனால் மைதானத்தில் இருந்த நடுவர் அதற்கு Wide தரவில்லை. அவர் விராட் கோலிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் ஆகையால் தான் விராட் கோலி சத்தத்தை பூர்த்தி செய்தவர் என்றும் அவர் விராட் கோலியின் ரசிகர் என்றும் பலர் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை