இந்திய அணி தற்போது சுமாராக அணியாக மாறிவிட்டது. அவர்கள் கடைசியாக வெற்றி பெற்றார்கள் என்று கூட தெரியவில்லை – மைக்கல் வாகன்.

இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் மோசமான பௌலிங் காரணமாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 வடிவ போட்டியில் T20 போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அதில் தொடாரை

By ·

இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் மோசமான பௌலிங் காரணமாக இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 வடிவ போட்டியில் T20 போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அதில் தொடாரை கைப்பற்றி இருந்தது. இந்திய அணி இது வரை தென்னாபிரிக்காவிற்கு சென்று ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இது வரை 31 வருடங்கள் ஆகின்றது.

இதில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அது அவர்களுக்கு சிறப்பாகவே கைகொடுத்தது. இந்திய அணியை ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாற வைத்தனர். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101 ரன்களும், விராட் கோலி 38 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களையும் அடித்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபடா 5 விக்கெட்டுகளையும் பர்கர் 3 விக்கெட்டுகளையும் கோட்ஸி மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே நன்றாக விளையாடி இந்திய அணிக்கு 164 ரன்கள் முன்னிலையில் இருந்தனர். அதாவது 2வது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்களை அடித்து இருந்தது. அதில் அதிக பட்சமாக எல்கர் 185 ரன்களும் ஜான்சன் 84 ரன்களும் பெண்டிகம் 56 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

அதன் பின் இன்றைய நாளில் 3வது இன்னிங்க்ஸ் விளையாடிய இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் மூலம் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் அதிக பட்சமாக கோலி 76 கில் 26 ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களை மட்டுமே அடித்து இருந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பர்கர் 4 விக்கெட்டுகளையும் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் ராபடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

இதில் இந்த அணி தோல்வியை தழுவியது குறித்து முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரர் மைக்கல் வாகன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சமீப காலமாக இந்தியா அதிகமான போட்டிகளில் வெற்றி பெறவில்லை. அவர்கள் ஒரு பின்தங்கிய தரப்பு. அவர்கள் எதிலும் வெற்றி பெறவில்லை. கடைசியாக எப்போது எதையாவது வென்றனர்? அவர்களிடம் உள்ள அனைத்து திறமையுடனும், அனைத்து திறமைகளும் உள்ளன இருப்பினும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை