கவனம் செலுத்தி கடினமாக உழைத்தால், அனைத்தும் சரியாகிவிடும் என்று யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கூறினேன் – முன்னாள் இந்திய தலைமை தேர்வாளர்.

டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின

By ·

டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்டில் சிறப்பான இன்னிங்கை விளையாடினார்.

ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணைந்து விளையாடினர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் தொடக்க போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்டது, சதம் அடித்தது என பல சாதனைகளையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாளரான திலீப் வெங்சர்க்கார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி பேசியுள்ளார்.

திலீப் கொடுத்த பேட்டி :

அந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அவருக்கு நினைவூட்டினேன், அவர் அதை விடாமல் இரு கைகளாலும் அதைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். இந்த சூழ்நிலையில் நிலைத்தன்மை முக்கியமானது என்பதால் நான் அவரிடம் சீராக இருக்க வேண்டும் என்று சொன்னேன். பேட்டிங்கின் மீது அர்பணிப்பாக இருந்து கடினமாக உழைத்து, கவனம் செலுத்துங்கள், பின்னர் விஷயங்கள் சரியாகிவிடும் என்று யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கூறினார் என்றார் வெங்சர்க்கார்.

மேலும் அவர் பேசுகையில் “முதல் சந்தர்ப்பத்தில் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரது செயல்பாடு முன்மாதிரியாக இருந்தது. ஒழுக்கமும், ஜெய்ஸ்வால் நிகழ்த்தக் காட்டிய உறுதியும் அவரது வாழ்க்கையில் நீண்ட தூரம் அவருக்கு உதவும். அவரது இன்னிங்ஸின் போது மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் ஒருபோதும் ரன்கள் எடுப்பதற்கான வாய்ப்பை விடவில்லை. தளர்வாக எந்த ஷாட்டுகளையும் ஆடவில்லை. சரியாக காணாம செலுத்து விளையாடினர் என்றார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அடுத்த போட்டியிலும் இதனையே செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதோடு இந்த போட்டியை தொடர்ந்து வரும் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் இவர்களின் செயல்பாடும் இதே போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை