ஆர்சிபி ரசிகர்கள் இப்படித்தான். DM-ல எப்படியெல்லாம் மெசேஜ் வரும் தெரியுமா? மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
உலக புகழ்பெற்ற ஐபிஎல் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டெடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு தொடராகும். இதன் மூலம் பல இளம் வீரர்களை இந்திய கண்டெடுத்த போதிலும் அவர்கள் அனைவருமே இந்திய அணிக்காக விளையாடுவதில்லை. இருந்த போதிலும் ஐபிஎல் தொடருக்கும் அதில் விளையாடும் அணிகள
உலக புகழ்பெற்ற ஐபிஎல் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு இளம் வீரர்களை கண்டெடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு தொடராகும். இதன் மூலம் பல இளம் வீரர்களை இந்திய கண்டெடுத்த போதிலும் அவர்கள் அனைவருமே இந்திய அணிக்காக விளையாடுவதில்லை. இருந்த போதிலும் ஐபிஎல் தொடருக்கும் அதில் விளையாடும் அணிகளுக்கு இருக்கும் ரசிகர்களும் அதிகம் என்றே சொல்லலாம்.
அப்படி ஒரு அணியை சொல்ல வேண்டும் என்றார் பெங்களூரு அணியை சொல்லலாம். இந்த அணி ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடி வந்தாலும் அவர்களுக்கு ஒரே ஒரு வருத்தம், அவர்களினால் இன்று வரையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கு காரணமும் தெரியவில்லை. சிறப்பாக விளையாடும் ஆர்சிபி அணி தொடரின் இறுதி கட்டங்களின் பொது மோசமான தோல்வியை சந்திக்கிறது.
இது தொடர்கதையாக கடந்த 16 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாத போதிலும் அவர்களுக்கும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியின் முக்கிய வீரரான தினேஷ் கார்த்திக் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் ஒரு பெட்டியில் பேசியிருந்தார். அந்த பேட்டியில் ஆர்சிபி அணி குறித்தும், ரசிகர்கள் குறித்தும் பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் “ஆர்சிபி ரசிகர்கள் விசுவாசமானவர்கள். அவர்கள் உண்மையில் குடும்பம், நான் அதை நல்ல மற்றும் கெட்ட வழிகளில் சொல்கிறேன். நல்ல வழி என்னவென்றால் நீங்கள் விளையாடும் போது என்ன நடந்தாலும் நான் உள்ளே நுழைந்தால் அவர்கள் என் பெயரைக் கொண்டாடுவார்கள், மேலும் நான் பூமியின் சிறந்த வீரர் என்று என்னை உணர வைப்பார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால் வெளி உலகத்திற்கு அவர்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
தனிப்பட்ட முறையில் அதே சில ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் என்னை என்னுடைய டி.எம்.களில் மோசமான பேசுவார்கள். RCB க்கு நான் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவர் என்னை கடுமையாக திட்டுவார்கள். அவர் என்னையும் என் குடும்பத்தை மட்டுமல்ல, என் வாழ்க்கையில் யாரை வேண்டுமானாலும் அடித்து நொறுக்குவார். ஆனால் வெளியுலகிற்கு அவர்கள் ஒரு RCB வீரரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
RCB FANS ARE LOYALISTS – DK talks about RCB's fandom.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 7, 2024
They are family both in a good and bad way 😂 RCBians, do u agree with what DK says? Watch the full video here!https://t.co/mx1cEZrIwO pic.twitter.com/CXPqFnsn8H
அவர்களைப் பொறுத்தவரை இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் 16 ஆண்டுகளாக போட்டியிடும் ஒரு அணிக்கு என்ன ஒரு ரசிகர் பட்டாளம்! நான் சொன்னது போல் அவர்களுக்கு இருப்பது ஒரு உண்மையான ரசிகர் பட்டாளம். நான் பல அணிகளில் அங்கம் வகித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் ரசிகர்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் RCB நம்பமுடியாதது என்றார் தினேஷ் கார்த்திக்.