இப்போது உள்ள இந்திய அணிதான் சிறந்த அணி.. ஆனால் அரையிறுதி வான்கடேவில் – தினேஷ் கார்த்திக்.
ற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிக்கு செல்லும் அணிகள் எது என்பது கிட்டத்தட்ட நிரூபணமாகிவிட்டது. இதனிடையே இந்த தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக் விளையாடிவரும் இந்திய அணி விளையாட
ற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிக்கு செல்லும் அணிகள் எது என்பது கிட்டத்தட்ட நிரூபணமாகிவிட்டது. இதனிடையே இந்த தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக் விளையாடிவரும் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக கோப்பை 2023 புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.
ஆனால் இந்த உலக கோப்பைக்கு முன்னர் இந்தியாவின் நிலை என்பது வேறு மாதிரியாக இருந்தது. அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டிக்கு முன்னர் இந்திய அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதில் பெரும் சவால் இருந்தது. ஏனென்றால் பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியா அணி கொஞ்சம் மோசமான நிலையில் இருந்தது.
அந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலேயே தெளிவாக தெரிந்தது. இதனால் இந்த முறை உலக கோப்பை போட்டியில் இந்தியா வெல்வது கடினம் என்று பலரும் விமர்சித்தனர். மேலும் காயம் அடைந்த வீரர்களை உடனடியாக உலக கோப்பை தொடரில் விளையாட வைக்கும் ரோஹித் சர்மாவின் திட்டத்தை பலரும் எதிர்த்தனர். இருந்த போதிலும் பயிற்சியாளர் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தனுக்களுடைய முடிவில் உறுதியாக இருந்தனர்.
அதன் காரணமாக காயம் முடிந்து திரும்பிய கேஎல் ராகுல் மற்றும் பும்ரா இருவருமே தற்போது சிறப்பான பார்மில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி தற்போது அரையிறுதி போட்டிக்கு தயாராகிவிட்ட நிலையில் இந்திய அணி குறித்து பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக். அவர் கூறுகையில் “தற்போது உள்ள இந்த இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் இந்தியா கொண்டிருக்காத வலிமையான அணியாக இருக்கலாம்.
தற்போதைய 2023 உலக கசாப்பையில் விளையாடும் இந்திய அணியைப் போல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி எதுவும் இல்லை. சிறப்பாகச் செயல்பட்ட மற்ற இந்திய அணிகளுக்கு எதிராக நீங்கள் வேறு அணிகளை எடுத்துக்கொண்டால் செயல்திறன் மற்றும் அழுத்தத்தின் அடிப்படையில் எப்போதும் வேறு அணிகளை விடவும் சமமாகவும் அல்லது அவர்களை விட பலமான அணியாகவும் இருக்கும்.
மும்பையில் நடக்கும் போட்டியின் போது அவர்கள் டாஸ் வென்றால், அவர்கள் முதலில் பேட்டிங் செய்வார்களா அல்லது முதலில் பந்துவீசுவார்களா என்பதுதான் முதல் பெரிய முடிவு. ஏனென்றால் அங்கு பனி இருக்கும், ஆனால் அவர்கள் அந்த முதல் ஸ்பெல்லைக் கடக்க வேண்டும். முதல் 10 ஓவர்கள் பந்து ஸ்விங் ஆகி சீம் ஆகும். இறுதிப் போட்டி வரை எந்த நிலையில் இருக்கும் என்ற கேள்விக்கு இடமில்லை. எனவே டாஸ் என்பது அங்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.