92 வருடங்களுக்கு பிறகு 100வது டெஸ்ட் போட்டியை விளையாடும் அஷ்வின் தான் ஒரு உதாரணம் – அஷ்வினை வாழ்த்திய தினேஷ் கார்த்திக்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது இன்று தரமசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் அஷ்வின் தனது 100வது போட்டியை விளையாட உள்ளார். இது வரை 99 டெஸ்ட் போட்டிகளில் 507 விக்கெட்டுகளையும், 116
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது இன்று தரமசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் அஷ்வின் தனது 100வது போட்டியை விளையாட உள்ளார். இது வரை 99 டெஸ்ட் போட்டிகளில் 507 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அஷ்வினின் இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு அளித்துள்ளார். அவரது 100வது போட்டி குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,
முதல்முறையாக நம்மூரில் இருந்து கிரிக்கெட் விளையாடி டெஸ்ட் போட்டிகள் நூறாவது போட்டி விளையாட உள்ளார். 1932 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகிறது ஆனால் அதில் 92 வருடங்களுக்குப் பிறகு பதான் முதல் தமிழ்நாடு வீரர்கள் நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். இதேபோல் இனி நிறைய வீரர்கள் டெஸ்ட் இதுபோன்று வரவேண்டும் என்னுடைய ஆசை. அஸ்வின் குறித்து பேசுகையில் நான் அவரை முதல் தடவை பார்க்கும்போது அவருக்கு 14 15 வயது இருந்தது.
அப்போது அவர் தன்னுடைய அப்பாவின் ஸ்கூட்டரில் பின்புறம் அமர்ந்து கொண்டு வந்திருந்தார் தற்பொழுது அவர் பந்து வீசுவதில் அதிகமான அளவுகளை ட்ரிக்ஸ் வைத்துள்ளார் ஆனால் நான் பார்க்கும் பொழுது அண்டர் 19 அந்த அளவிற்கு அவரிடமிருந்து ட்ரிக்ஸ் கிடையாது அவர் ஆரம்பகட்ட காலத்தில் வெள்ளை பந்தில் தான் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தார். அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன் இதே போன்று உன்னால் ரெட் பந்தில் வீச முடியுமா என்பது போல் கேட்டேன் அதற்கு அவர் அதில் அந்த அளவிற்கு சரக்கு இல்லை என்றும் கூறியிருந்தார்.
அப்பொழுது அவ்வாறு கூறியவர் தான் என்று நூறாவது போட்டியை விளையாடுகிறார். எப்போதும் நம்முடைய அப்பாக்கள் கிரிக்கெட் ஆர்வமாக இருப்பார்கள் அம்மாக்களும் அதே போல் ஆர்வமாக இருப்பார்கள். அஸ்வின் உடைய அம்மா கிரிக்கெட் அனைத்து விதமான டெக்னிக்களையும் தெரிஞ்சவர் அவரது அம்மாவும் அஸ்வினும் நான் நிறைய அளவில் கிரிக்கெட் பந்து வீசுவது பற்றி விவாதம் செய்வார்கள் அஸ்வினிக்கு பெரிய பெரிய வாழ்த்துக்கள் நம் கூற வேண்டும்.
Indha Milestone “Nallarku Ash!” 🥳💛#INDvENG #AshTon @DineshKarthik @ashwinravi99 pic.twitter.com/xdYCi84ISM
— Chennai Super Kings (@ChennaiIPL) March 6, 2024
அவரிடம் நான் இந்த டக் அவுட்டில் அமர்ந்து கொண்டிருக்கும்போது அவர் நம்மிடம் அவர் பேசுவது இவர்தான் 500 விக்கெட்டுகளை வீழ்தினாரா என்பது போல நமக்கு சந்தேகங்கள் வரும். அவர் நம்மிடம் ஆடுகளத்தில் பந்து திரும்புகிறதா இல்லையா என்பது போல நம்மிடம் அவர் நிறைய கேள்விகளை எழுப்புவார். இதுபோன்ற நிறைய வீரர்கள் நமக்கு கிடைக்க மாட்டார்கள் அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருப்பார் வருகின்ற தலைமுறைகளுக்கு அவ்வளவு திறமை இல்லை என்று நினைத்த அவர் தற்போது அவர் பெரிய உதாரணமாக இருந்து வருகிறார். அவருக்கு என்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டிக்கான வாழ்த்துக்கள் அவருடைய உழைப்பு நம்ப முடியாத அளவுக்கு இருந்து வருகிறது என்றும் தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்