7 வருடத்திற்குப் பிறகு தமிழக அணியை வெற்றி பெற வைத்த கேப்டனை இப்படி பேசலாமா??தமிழக அணியின் பயிற்சியாளரை விமர்சித்த தினேஷ் கார்த்திக்.

தற்போது நடந்து வரும் ரஞ்சி ட்ரோபியில் தமிழக அணியின் தோல்விக்கு காரணம் அணியின் கேப்டன் சாய் கிஷோர் தான் என்று தமிழக அணியும் பயிற்சியாளர் குல்கர்னி கூறியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது x தளத்தில் பதிவு ஒன்றையும் பதிவேற்றியிருந்தார்

By ·

தற்போது நடந்து வரும் ரஞ்சி ட்ரோபியில் தமிழக அணியின் தோல்விக்கு காரணம் அணியின் கேப்டன் சாய் கிஷோர் தான் என்று தமிழக அணியும் பயிற்சியாளர் குல்கர்னி கூறியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தனது x தளத்தில் பதிவு ஒன்றையும் பதிவேற்றியிருந்தார். மும்பை அணிக்கும் தமிழ்நாட்டு அணிக்கும் இரண்டாம் தேதி நடைபெற்ற ரஞ்சி ட்ரோபி இந்திய தமிழக 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தமிழக அணியின் மோசமான பேட்டிங் வெளிப்பட்டால் 146 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் விளையாடிய மும்பை அணி 378 ரண்களை குவித்து மாபெரும் முன்னிலையில இருந்து வந்தது. அதன் பின் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அதை 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே 70 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு காரணம் அணியின் கேப்டன் தான் சாய் கிஷோரியான் என்று அணியின் பயிற்சியாளர் குல்கர்னிகூறி இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் நான் எப்போதும் மிகவும் நேராகப் பேசுவேன்; முதல் நாள் 9 மணிக்குப் போட்டியில் நாங்கள் தோற்றோம். அதுதான் என்னுடைய அப்பட்டமான, நேரான பதில். ஏனென்றால் எல்லாம் செட் ஆகிவிட்டதாக நான் நினைத்தேன்.

டாஸ் வென்றோம், ஒரு பயிற்சியாளராகவும், மும்பைக்காரனாகவும். நானே, நிலைமைகளை அறிந்தேன் ஆம், நாங்கள் முதலில் பந்துவீசியிருக்க வேண்டும். ஆனால் மீண்டும், கேப்டன் தனது சொந்த உள்ளுணர்வைக் கொண்டிருக்கிறார், இறுதியில், அவர்தான் முதலாளி. விக்கெட் மற்றும் மும்பையின் மனநிலை பற்றிய எனது உள்ளீட்டை மட்டுமே என்னால் கொடுக்க முடியும் எனவே இந்த தோல்விக்கு சாய் சுதர்ஷன் தான் காரணம் என்று கூறியிருந்தார்.

இதற்க்கு மறுப்பு தெரிவித்து x தளத்தில் தினேஷ் கார்த்திக் அவரது கருத்தை பதிவேற்றி இருந்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு அணியை அரையிறுதிக்குக் கொண்டு வந்த கேப்டனை ஆதரிப்பதற்குப் பதிலாக, நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கும் என நினைத்து, பயிற்சியாளர் தனது கேப்டனையும், அணியினரையும் பேருந்தின் அடியில் தள்ளிவிட்டார். என்றும் பதிவேற்றி இருந்தார். மும்பை அணி இதில் வெற்றி பெற்றதன் மூலம் 48வது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை